கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது..
புதிய கட்டுப்பாடுகள்..
சென்னை, ஏப்:
கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன் சமூக இடைவெளி கடை பிடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது.
இதுபற்றி சிஎம் டி ஏ (பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) உறுப்பினர், செயலர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுளார். அதில் கூறியிருப்ப தாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருட் களை வாங்குவதற்கு பொதுமக்கள் நேரடியாக வர தடை செய்யப் படுகிறது. சில்லரை விற்பனையும் முழுமையாக தடை செய்யப்படு கிறது.சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த பகுதி களில் உள்ள திறந்தவெளி மைதானம், பஸ் நிலையத் தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய வேண்டும். கோயம்பேடு பூ மார்க் கெட், பழங்கள் அங்காடி 30-ந்தேதி முதல் மாதவரம் பஸ் நிலையத்தில் இயங்கும். கோயம்பேடு மார்க் கெட்டுக்கு வரும் வெளிமாநில, வெளிமாவட்ட வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்களை இறக்கிய பின் வெளி யேற்றப்படும். காலை 7.30 மணிவரை வியாபாரிகள் சில்லரை விற்பனைக்கு காய்கறி வாங்குவதற்கு அனுமதிக்கப் படும்.
இவ்வாறு அறிகையில் கூறி உள்ளார்.
#koyembadu market latest news
#கோயம்பேடுமார்க்கெட்