.
சீனா, இத்தாலியை மிஞ்சியது
சீனா, அமெரிக்கா, இத்தாலியில் கொரோனா வைரஸ் கோரா தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் யார் பெரியண்ணா என்பதில் வர்த்தக ரீதியாக அமெரிக்கா, சீனா நாடுகள் போட்டிபோட்டு வந்த நிலை யில் தற்போது நிலைமை மாறிவிட்டது கொரோனாவில் யார் முதலிடம் என்று இருநாடுகளும் இடையே போட்டியாகி விட்டது
அமெரிக்காவில் கோவிட் 19 எனப்படும் கொரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சீனாவை மிஞ்சி முதலிடத்திற்கு வந்துள்ளது.கடந்த ஒரு நாளில் மட்டும் 16,824 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 1,04,205-ஆக கிடு கிடுவென உயா்ந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா அதிகம் பேருக்கு பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறி உள்ளது. சீனா, 81,394 மூன்றாவது இடத்தில் உள்ளது.இன்றைய நிலவரப்படி இத்தாலியில் கொரோனா பாதித்தவர் களின் எண்ணிக்கை 86,498 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 9,134 ஆகி இருக்கிறது.
#The U.S. Now Leads the World in Confirmed Coronavirus Cases