மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்..
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பரவி இந்தியாவையும் பதம் பார்த்து வருகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு தற்போது 370 ஆக அதிகரித் துள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 7 பேர் இறந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக
இன்று நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அமலில் இருந்த ஊரடங்கு பிறகு காலை 5 மணிவரை நீடித்து தமிழக அரசு உத்தர விட்டது. பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க ஊரடங்கு நடந்தது.
நாடு முழு வதும் சாலைகள் வெறிச் சோடியது. மருத்துவ மனை, மருந்தகங்கள் மட்டும் திறந்து வைக்கப்பட்டது.
மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய் யப்பட்டுள்ளது. ரயில் போக்கு வாரத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கலில் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
corono vairus threat: TN enters shut down Today