கட்டுப்பாட்டு அறை: சோனியா அமைத்தார்
கொரோனா வைரஸ் பாதிப்புள்ளான வர்களுக்கு உதவி காங்கிரஸ் இடைக் காலத் தலைவர் சோனியாகாந்தி மத்திய கட்டுப்பாட்டு அறை அமைத்தி ருக்கிறார்.
இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில், ‘அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியில் மத்திய கட்டுப்பாட்டு அறையை அமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா தொடர் பான விஷயங்களை ஒருங்கிணைப்ப தற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சாதவ், முன்னாள் எம்எல்ஏ தேவேந்திர யாதவ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் மணீஷ் சத்ரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பணிகளை ஒருங்கிணைப் பதற்காக மாநிலங்களுடன் தொடர்பில் இருப்பதற்காக இந்தக் கட்டுப்பாட்டு அறையை அமைப்பது குறித்து டெல்லி மாநிலத் தலைவர்களால் பரிந்துரைக் கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் கலந்து ரையாட வேண்டும். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டுள்ளதால், உணவு மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கு வதற்காக கட்சி நிர்வாகி களுக்கு மாநில அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது’ என அதில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது.
#Sonia Gandhi sets up central control room for assistance on COVID-19