கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள்
மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி ஏப் :
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ம் தேதியுடன் முடிவ தாக இருந்த ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார் பிரதமர் மோடி. இந்நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின் கட்டுப் பாட்டு தளர்வுகள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் தளர்வு மற்றும் கட்டுப்பாடுகள் பற்றிய வழிமுறைகளை வெளியிட் டுள்ளது.
அதன் விவரம் வருமாறு :
அனைத்து பயணிகள் ரயில் சேவைகளுக்கும் தடை தொடரும். அதேபோல் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப் பட்டிருக்கிறது
பேருந்து சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளின் ரத்தும் வரும் மே 3ம் தேதி வரை தொடரும். மாநிலங் கள் , மாவட்டங்களுக்கு இடையே மருத்துவ தேவைக் காக மட்டும் போக்கு வரத்து அனுமதிக்கப்படும். ஆட்டோ கால் டாக்ஸி , ரிக்ஷக்கள் ஓடவும் தடை தொடரும்
சினிமா தியேட்டர்கள், மால், ஜிம் , விளையாட்டு பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், மதுக் கடைகள், கலை நிகழ்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை அப்படியே தொடரும். பள்ளி, கல்லூரி, தொழிற்பயிற்சி கூடங்கள், மே 3 வரை செயல்பட அனுமதி கிடையாது திருமணங்களுக்கும் தடை நீடிக்கப்படுகிறது ஏப்ரல் 20ம் தேதி முதல் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கலாம். எனினும்,கொரோனா அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் முடக்கப் பட்ட பகுதிகளுக்கு அனுமதி கிடையாது ஹைவேகளில் உள்ள ஹோட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் தொடர்ந்து செயல்படலாம்.
மருந்துப் பொருட்கள், உபகரணங்கள் கொண்டு செல்ல விமான சேவைக்கு அனுமதிகப்படும்.
வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். பணிபுரியும் இடங்களிலும் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளி யில் நடமாடினால் கடும் நடவடிக்கை பாயும் . இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது. மத கூட்டங்கள் மே 3 வரை நடத்தக்கூடாது.
இவ்வாறு கட்டுப்பாடுகளும், தளர்வு களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
#Lockdown 2.0 rules: From 20th April what’s open what’s banned
#கொரோனா புதிய கட்டுப்பாடு வழிமுறைகள்