கொரோனாவிலிருந்து மீண்ட பாடகி கனிகா கபூர்.
உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்த பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. ஆனாலும் அவர் பலரிடம் அதுபற்றி சொல்லாமல் பழகியதுடன் பார்ட்டியில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் மற்றவர்களுக்கும் கொரோனா பரப்பினார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் மருத்துவமனையில் கனிகா அனுமதிக்கப்பட்டார். அவரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித் தனர். 5 முறை டெஸ்ட் செய்து பார்த்ததில் கொரோனா வைரஸ் தொற்று 5 முறையும் உறுதி செய்யப் பட்டது. அவருக்கு தகுந்த சிகிக்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து குணம் அடைந்து இன்று வீடு திரும்பினார்.
வீட்டில்தனி அறையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என அவரிடம் கூறப்பட்டுள்ளது.
#Singer Kanika Kapoor finally recovers from Corona
#பாடகி கனிகா கபூர் குணம் அடைந்தார்
#கொரோனா