காப்பான் பட பாணியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு?
இந்தியாவுக்கு அடுத்த ஆபத்து..
சீனாவில் பரவிய கொரோனா தொற்று இந்தியா உள்ளிட்ட நாடு களில் பரவி அரசாங்கங்களை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனவை கட்டுப் படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில்
தற்போது இந்தியா மீது ஆபத்தான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நடந்து உணவு உற்பத்தியை அழிக்கும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
பல லட்சக்கணக்கான ஆப்பிரிக்க வெட்டுக்கிளிகள ஏமன், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்தடைந்து பிறகு பஞ்சாப் மற்றும் அரியானாவில் பயிர்களில் ஏக்கர் கணக்கில் நொடியில் அழிக்கும் எனவும் இதனால் இந்தியாவில் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என இந்தியாவை ஐ நா எச்சரித் திருக்கிறது.
கடந்த மாதத்தில் இப்படித்தான் பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் படை யெடுப்பு நடந்தது. இது அந்நாட்டுக்கு அதிர்ச்சி அளித்தது என்பது குறிப் பிடத்தக்கது.
சமீபத்தில் கே. வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த காப்பான் படத்தில் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பு மையமாக வைத்து விவசாய நிலங்களை அழிக்கும் காட்சிகள் இடம் பிரதான மாக வைக்கப்பட்டிருந்தன பெற்றிருந்தன. அதுபோல் ஒரு பயங்கரத்தை இந்தியா நேரில் காணுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
#Locusts pose severe threat to agriculture in India
#வெட்டுக்கிளிகள்படையெடுப்பு