Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சீனா ரேபிட் கருவிகளுக்கு மத்திய அரசு திடீர் தடை.

சீனா ரேபிட் கருவிகளுக்கு மத்திய அரசு திடீர் தடை.

கொரோனாவை துல்லியமாக கண்டறியவில்லை.

புதுடெல்லி ஏப் :
சீனாவில் யூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவியது. பிறகு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் 28 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதுவரை 872 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றை வேகமாக கண்ட றிய சீனாவில் இருந்து 30 லட்சம் ரேபிட் கிட் பரிசோதனை கருவிகளை இந்தியா ஆர்டர் செய்தது. அப்படி இறக்குமதி செய்யப் பட்ட அந்த கருவிகள் தமிழ் நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களுக்கு அனுபப்பட்டது.

சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட ரேபிட் கிட்களின் பரிசோதனை முடிவுகள் கொரோனா தொற்றை துல்லியமாக காட்டவில்லை என பல்வேறு புகார்கள் வந்தன. இதனால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக சீனா ரேபிட் கிட்களில் பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது
மேலும் இந்த கருவிகளை குறைந்த விலைக்கு சீனாவிலிருந்து அதை குறிப்பிட்ட நிறுவனம் இந்தியாவுக்கு அதிக விலைக்கு விற்ற விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து சீனா ரேபிட் கருவிகளின் ஆர்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் ஏற்படவில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#No loss to government as rapid kit order from Chinese firms cancelled, says ICMR
.

Related posts

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மு க. ஸ்டாலின் தொகுதி எது?

Jai Chandran

Motion Poster of ChithiraiSevvaanam

Jai Chandran

கொரோனா வைரஸ் பற்றிய ஹாலிவுட் படம் கான்டிஜென்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend