மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு..
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆழ்வார்பேட்டை எல்டாம் சாலையில் உள்ள இவரது வீட்டில் இன்று காலை சென்னை மாநகராட்சியினர் கொரோனா தனிமைப்படுத்தலில் மார்ச் 10ம்தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பாப்பரப்பு ஏற்பட்டது.
நோட்டீஸ் ஓட்டியது பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் கூறும்போது,’கமல் வீட்டில் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டியதில் சிறு தவறு நடந்துவிட்டது. . இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்’ என்றார்.
மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில்.’
அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம், உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதை யும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப் படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்த ஸ்ருதி ஹாசன் கொரோனா தொற்றிலி ருந்து விலகி இருக்க நான்(ஸ்ருதி), தந்தை கமல். தங்கை அக்ஷரா மற்றும் அம்மா சரிகா ஆகியோர் தனித்தனி வீடுகளில் தங்கி இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
#Kamal Haasan quarantined himself for Corona