Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கமல்ஹாசனுடன் கைகோர்த்த அனிரூத்..

கமல்ஹாசனுடன் கைகோர்த்த அனிரூத்..

ஆண்ட்ரியா, ஜிப்ரானும் இணைந்தனர்..

மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் கொரோனா ஊரடங்கு பற்றி தனது கருத்தை பிரதமர் மோடிக்கு ஓபன் லெட்டர் மூலம் தெரிவித்தார். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறித்து அன்பும் அறிவும் என்ற ஸ்பெஷல் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

திரையுலகின் பிரபல பாடகர் பாடகி, இசை அமைப்பாளர்கள், நடிகைகள் கமலுடன் இந்த பாடலில் கைகோர்த்த துடன் இணைந்து பாடியும் இருக்கிறார்கள்.

கமல்ஹாசனுடன் இணைந்து அனிருத் ரவிச்சந்திரன், யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மஹா தேவன்,ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன்,ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம் அண்ட் முகேன் ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்பாடலுக்கு இசை அமைத் திருக்கிறார் ஜிப்ரான். மஹேஷ் நாராயணன் எடிட்டிங் இப்பாடல் ஏப்ரல் 23 திங்க் மியூசிக் நிறுவனத் தால் இந்த பாடல் வெளியி டப்பட்டது. ஜூம் செயலியின் மூலமாக முதன்முறையாக ஊடக நண்பர்கள் முன்னி லையில் கமல்ஹாசனும், ஜிப்ரன் பாடலை வெளியிட்ட னர். மற்றவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த பாடலை உருவாக்க எல்லோரும் மேற்கொண்ட முயற்சி, அக்கறை குறித்து கமல்ஹாசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது :
இது ஒரு உண்மையான ஜனநாயக முறைப்படி நடந்தது. நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க இயலாத காரணத் தினால் அவரவர் பாடும் பகுதிகளை தனியாக படம் பிடித்தனர். இப்படி அவர்களாகவே வீட்டில் இருந்தபடி படப்பிடிப்பு நடந்ததால் இப்பொழுது ஒளிப்பதிவு என்று யாருடைய பெயர் போடுவது என்று எங்களுக்கு தெரியவில்லை.

உச்சகட்ட தொழில்நுட்ப காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவரவர் எடுத்த காணொளிகளை எங்களுக்கு அனுப்பி வைக்க அதை நாங்கள் ஒன்றாக தொகுத்தோம்.
நான் பாடல் எழுதினேன், ஜிப்ரான் இசையமைத்தார், மற்ற பாடகர்கள் அனை வரும் ஒரே ஒரு தொலை பேசி அழைப்பில் இந்த நோக்கத்தினைப் புரிந்து உடனே பங்குபெற்றனர்.
இந்த கூட்டமைப்பு, எனது இனத்தின் பெருமையை இங்கு மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுக்க பறைசாற் றும். கலைஞர்கள் எப்பொ ழுதும் மக்களிடையே நம்பிக்கையை விதைப்ப வர்கள். இப்பாடல் நம் அனைவருக்கும் மிகவும் கடினமான சூழலை கடக்கக் கூடிய வலிமையையும் வல்லமையையும் தரும் என்று உணர்த்தக் கூடியது என்பதை மீண்டும் நிரூபிக்கும்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
திங்க் மியூசிக் நிறுவனத்தின் தலைவர் ஸ்வரூப் ரெட்டி, ஜிப்ரான் உள்ளிட்டோர் பாடல் உருவாக நடந்த கூட்டு முயற்சி பற்றி தெரிவித்தனர்.

#UlagaNayagan #kamalhaasan
#arivumanbumReleasedtoday
#Ghibran #anirudh #BombayJayashri #Siddharth #sidsriram #Shankar #shrutihaasan #andreajeremiah

Related posts

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் காலமானார்..

Jai Chandran

பயணிகள் கவனிக்கவும் (பட விமர்சனம் )

Jai Chandran

மகத்தான வரவேற்பில் ஜீ.வி. பிரகாஷின் ‘ரெபல்’ டீசர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend