கட்டுப்பாடுகள் மீறியதால் டாஸ்மாக் மது கடைகள் மூட உத்தரவு..
ஐகோர்ட் அதிரடி நடவடிக்கை..
சென்னை, மே 8-
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கை மத்திய அரசு பிறப்பித்தது. வரும் 17ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக் கிறது. இதற்கிடையில் சில கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன, இதையடுத்து ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மது கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் தமிழகத்திலும் சென்னை மாநகர எல்லை தவிர பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ கடைகள் 7ம் தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.
டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த துடன் போராட்டதில் ஈடுபட்டனர். முன்ன தாக மது கடைகள் திறக்க தடை விதிக்க கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. ஆனால் மது கடைகள் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி தரப்பட்டது, அதன்படி நேற்று மதுக்கடைகள் திறக்கப் பட்டன. நேற்று ஒரேநாளில் சுமார் 176 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மதுக் கடைகளில் விற்பனை கோர்ட் உத்தரப்படி நிபந்தனைகளுடன் நடக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டதில் ஒரு சில நிபந்தனை மீறல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
ஆன்லைனில் மது விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
#Madras high court orders closure of Tasmac liquor shops in Tamil Nadu
#டாஸ்மாக் மூட ஐகோர்ட் உத்தரவு