ஊரடங்கு முடிந்தவுடன் சிறு பட ரிலீஸுக்கு முன்னுரிமை
தயாரிப்பாளர் ஜே எஸ் கே கோரிக்கை..
ராம் இயக்கி நடித்த தங்க மீன்கள், விஜய் சேதுபதி நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட தரமான பல படங்களை தயாரித்த்துடன் பல படங்களை விநியோகித் தவர் ஜே எஸ் கே. சதீஷ் குமார்.
இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோ சனை குழு உறுப்பினராக வும் உள்ளார். அவர் கூறியி ருப்பதாவது :
கொரோனா வைரஸ் பாதிப் பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதனால் தமிழ் திரைப்பட துறை ஸ்தம்பித்துள்ளது. படவேலைகள் முடிந்து வெளியிட திட்டமிட்ட பட பணிகள் அப்படியே சிதைந்து விட்டது. எனவே கதாநாயகர், கதாநாயகி, இயக்குநர், இசையமைப் பாளர், கேமிராமேன் மற்றும் முக்கியமான டெக்னிஷியன் கள், தங்கள் ஊதியத்திலி ருந்து 30% சம்பளம் விட்டுக் கொடுத்து தயாரிப்பாளர் களுக்கு உதவ வேண்டும்.
திரைப்பட பைனாஸ்சியர் களும் தயாரிப்பாளர்களின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அதாவது 2 மாதங்களோ, 3 மாதங்களோ அல்லது 4 மாதங்களோ வட்டி தொகை யினை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு வெளியாகி ஓடிக் கொண்டிருந்த படங்களுக்கு இயல்பு நிலை திரும்பியதும் ம ரீரிலீஸ் செய்வதற்கும், சிறிய பட்ஜெட் படங்கள் வெளியிடவும் முன்னுரிமை தந்து உதவ வேண்டும் என்று தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்திற்கும், விநியோகஸ் தர்கள் சங்கத்திற்கும் வேண்டுகோள் வைக்கி றேன்.
இவ்வாறு ஜே.எஸ்.கே.சதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
#Producer demand 30 Percrnt less from Actor, Actres Salary
#JSK.Satheshkumar
#Thangamenkal
#தயாரிப்பாளர் ஜே எஸ் கே. சதீஷ் குமார் #தங்கமீன்கள்