Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் இந்தி படம் ரிலீஸ் தேதி

தென்னிந்திய சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குநர் என புகழ்பெற்ற, இயக்குநர் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் “ஷெர்ஷா” படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கார்கில் போரில் கலந்து கொண்டு பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்தால் மற்ற பெரிய படங்கள் போலவே 2020 ஆம் ஆண்டிலிருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது 2 ஜூலை 2021 அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Dharma Productions சார்பில் கரண் ஜோகர் இப்படத்தினை தயாரிக்க, Kash Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது.

Related posts

Nesippaya will be a visual treat – Vishnuvardhan

Jai Chandran

ரஜினியின் வேட்டையன் அக்டோபர் 10 ரிலீஸ்

Jai Chandran

Keerthy Suresh launches her new skincare brand “Bhoomitra”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend