Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

போலீஸ் வேடத்தில் யாஷிகா நடிக்கும் ” சல்பர் “: புவன் இயக்குகிறார்.

முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் ” சல்பர் ” யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு  இனியன் ஜே ஹாரிஸ். இவர் கன்னிமாடம், பாம்பாட்டம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர். இசை  சித்தார்த் விபின். எடிட்டிங்  எலிசா. கலை  பழனி. ஸ்டில்ஸ்  சக்தி பிரியன். மக்கள் தொடர்பு  மணவை புவன்.

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் யாஷிகா அனந்த் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் விபின் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னையில் ஓர் காவல் நிலையத்தில் SI ஆக பணியாற்றுகிறார் நாயகி பாரதி. அங்கே எதிர்பாராத விதமாக ஏற்படும் சிக்கலால் பணியிடை மாற்றம் பெற நேரிடுகிறது. தான் மிகவும் நேசித்த crime department-ல் இருந்து காவல்துறைக்கட்டுபாட்டு அறைக்கு பணி மாற்றமாகிறார்.

தன் திறமைக்கு இங்கே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை என அவள் நினைத்து சாதாரணமாக தன் வேலையை தொடர்கையில், ஒருநாள் மாலை கட்டுபாட்டு அறைக்கு ஓர் அழைப்பு வருகிறது. எதிர்முனையில் பேசும் பெண் தான் இன்னும் சில மணி நேரங்களில் இறந்துவிடுவேன், என்னை நிச்சயம் கொன்றுவிடுவார்கள் என சொல்ல, ஆரம்பத்தில் அந்த கால் frank என பாரதி நினைக்க, பின்புதான் பாரதிக்கு அந்த வழக்கின் தீவிரம் புரிகிறது.பின் அந்த வழக்கை பாரதி எப்படி எதிர்கொண்டாள் என்பதை “ஆக்‌ஷன்-திரில்லர்” கலந்த்து திரைக்கதை வடிவமைக்க பட்டிருக்கிறது.

Related posts

ஹனு மான் படத்துக்காக “அஞ்சனாத்ரி” என்ற புதிய உலகம்: ஹீரோ தேஜா தகவல்

Jai Chandran

அசத்தல் நடனத்தில் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” வெப் தொடர்

Jai Chandran

ருத்ரதாண்டவம் இசை அமைப்பாளரின் புதிய படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend