Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

யாத்திசை ( பட விமர்சனம்)

படம்: யாத்திசை

நடிகர்கள்: ஷக்தி மித்ரன் (ரணதீர பாண்டியன்), சேயோன் (கொதி -( எயின தலைவன்), ராஜலட்சுமி ( தேவரடி யார்), குரு சோமசுந்தரம் ( எயின பூசாரி), சுபத்ரா (பெரும்பள்ளி தலைவி),
சமர் (துடி -எயின போர் வீரன் ), வைதேகி அமர்நாத் (தேவரடியார்)
:
தயாரிப்பு: கே.ஜே.கணேஷ்

இசை: சக்ரவர்த்தி

ஒளிப்பதிவு: அகிலேஷ் காத்தமுத்து

இயக்கம்: தரணி ராசேந்திரன்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

பாண்டிய மன்னன் ரணதீரணின் வரலாறு கூறும் படமாக உருவாகி யிருக்கிறது யாத்திசை. அதுவும் முழுவரலாறு அல்ல ஒரு பகுதி வரலாறு.

பேரரசுகளையும், சிற்றரசு களையும் போரில் வெல்கிறான் ரணதீர பாண்டியன். போரில் தோற்றவர்கள் நாடிழந்து, உடமை இழந்து காட்டிலும் பாலைவனத் திலும் வேட்டையாடிகளாக எயினர்கள் என்ற கூட்டமாக வாழ்கின்றனர். எயினர்கள் தலைவன் கொதி (சேயோன்) பாண்டிய மன்னன் ரணதீரணை கொன்று ராஜ்ஜியத்தை பிடிக்க சபதம் செய்கிறான். அதற்காக சோழ மன்னருடன் ரகசிய ஒப்பந்தம் செய்கிறான். இதற்கிடை யில் எயினர்களின் படையை திரட்டி வந்து ரணதீரணை
கொரிலா போர் முறையில் மறைந்திருந்து தாக்கி தோற்ற கடிக்கிறான் கொதி. ஆட்சியை இழந்த ரணதீரன் பெரும்பள்ளி யினரிடம் தஞ்சம் புகுந்து அவர்கள் ஆதவுடன் எயினர்களை வீழ்த்தி இழந்த ராஜ்ஜியத்தை மீட்க திட்டமிடுகிறான். ரணதீரன் தனது திட்டத்தை எப்படி நிறைவேற்று கிறான். இழந்த ராஜ்ஜியத்தை கைப்பற்ற முடிந்ததா? எயினர்கள் கதி என்வானது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

அந்த காலத்து மன்னர் கால படங்கள் தொடங்கி இந்தக் கால பொன்னியின் செல்வன் வரை ராஜா, ராணி என்றால் அரண் மனை, ஆபரணம் என்ற பளபள வென பார்த்து பழக்கப்பட்டுவிட்ட ரசிகர்களுக்கு யாத்திசை அந்த வகையில் ஏமாற்றத்தை தந்தாலும் காட்டிலும் மேட்டிலும் மன்னர்கள் புகுந்து தப்பித்து பின்னர் ராஜ்ஜி யத்தை பிடிக்க போராடும் எதார்த் தங்கள் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை தரும்.

எயினர்களின் வாழ்க்கையோடு படம் தொடங குகிறது. எயினர்கள் தலைவன் கொதியாக வரும் சேயோன் கட்டுமஸ்த்தான தேகத்துக்கேற்ப துடிப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி மனதில் இடம் பிடிக்கிறார்.

ரணதீரன் மீது கொரிலா முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்கி பாண்டிய படைகளை சிதறடிக்கும் அந்த முதல் தாக்குதலே பின்னர் வரவிருக்கும் மோதல்களும் இப்படி தானிருக்கும் என்பதை கோடிட்டு காட்டுகிறது. வெற்றுடம்பில் ஈட்டி, கத்திகள் பாய்வது உடலை சிலிர்க்க வைக்கிறது.

ரணதீர பாண்டியனை எப்போது காட்டுவார்கள் என்ற ஆர்வம் மேலிடுகிறது. முதல் தாக்குதலிலே யே அவர் எயினர்களிடமிருந்து தப்பி ஓட்டம்பிடிப்பதுபோல் காட்டுவதுதான் மனதை உறுத்து கிறது. ஆனாலும் அடுத்தடுத்து வரும்போது தனது கம்பீர பார்வையால் வேடத்தை நிமிர வைக்கிறார்.

பெருபள்ளியர்களிடம் தஞ்சம் அடையும் ரணதீரன் அவர்களிடம் ஆதரவு கேட்கும்போது அவர்கள் தங்கள் இன பெண்ணை மணக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவதும் அதை ரணதீரன் ஏற்று மணம் முடிப்பதும் பிரத்யேக காட்சி.

கிளைமாக்சில் ரணதீரன், கொதி அதாவது சக்தி மித்ரன், சேயோன் இருவரும் நேருக்குநேர் ஒத்தைக்கு ஒத்தையாக மோதும் சண்டைக் காட்சி மிரட்சி.

தேவரடியாளாக வரும் ராஜலட்சுமி, வைதேகி இருவரும் தாளம் தப்பாமல் நட நடனமாடுகின்றனர்.
படை வீரர்களாக வரும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கும்பலில் கோவிந்தா போட்டிருக் கின்றனர்.

படத்தை பலமாக தாங்கி நிற்பது சக்ரவர்த்தியின் இசையும், அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவும் என்றால் அது மிகையல்ல.

மகேந்திரன் கணேசன் எடிட்டிங் கவனமாக காட்சிகளை கோர்த் திருக்கிறது.

கே. ஜே கணேஷ் துணிச்சலான தயாரிப்புக்கு ஒரு சபாஷ்.

இயக்குனர் தரணி ராசேந்திரன் ,”மன்னர் கதையை கள எதார்த் துடன் சொல்ல வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டி ருக்கிறார். ரணதீரனின் ஒரு போரில் மட்டும் கவனம் செலுத்தி இயக்கி இருப்பது தெளி வான முடிவு.
இப்படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்கிறார் இயக்குனர்.

யாத்திசை – சொல்லப்பட  வேண்டிய தமிழர் வரலாறு .

 

Related posts

தற்கொலை செய்த விஜே சித்ரா நடித்த பட டீஸர் வைரல்..

Jai Chandran

அப்பாவை ஏமாற்றி.படம் தயாரித்த இயக்குனர்

Jai Chandran

Naane Varuven Shooting Begins from Today!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend