Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

வித்தைக்காரன் (பட விமர்சனம்)

படம் வித்தைக்காரன்

நடிப்பு: சதீஷ், சிம்ரன் குப்தா,  ஆனந்தராஜ், மதுசூதனன்,  சுப்பிரமணியம் சிவா, ஜான் விஜய் பாவல் நவகீதம், ஜப்பான் குமார்

தயாரிப்பு: கே விஜய்பாண்டி

இசை: வி பி ஆர்

ஒளிப்பதிவு: யுவ கார்த்திக்

இயக்கம்: வெங்கி

பி ஆர் ஒ: சதீஷ் ( AIM)

சதீஷ் மேஜிக் செய்தும், அவ்வப் போது திருட்டுகள் செய்தும் பிழைத்து வருகிறார். நகரில் 3 கடத்தல் கூட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுடன் சதீஷ் தொடர்பு கொண்டு ஒருவருக்கு தெரியாமல்  இன்னொருவர்  கொண்டு செல்லும் கடத்தல் பொருளை  கைமாற்றி விடும் வேலையை செய்கிறார். கப்பலில் வரும் தங்கத்தை எடுத்து தருவ தாக கூறி   அதை அவரே பதுக்கி விடுகிறார்
விமான நிலையத்தில் சிக்கிக் கொள்ளும் 25 கோடி மதிப்பிலான வைரத்தை அடைய  மூன்று கடத்தல் கூட்டங்கள்  முயற்சிக்க  அவர்களுக்கு சதீஷ் உதவுவதாக கூறி எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு அந்த வைரங்களையும் அவரே அபேஸ்  செய்கிறார். இந்த திருட்டை ஏன் சதீஷ் செய்கிறார் , மூன்று கடத்தல்  கூட்டத்தையும் சதீஷ் பழி வாங்குவது ஏன் என்பதுதான் கிளைமாக்ஸ்.

நகைச்சுவை நடிகர்களில் சந்தானம் , யோகி பாபு போன்ற வர்கள் ஹீரோக்களாக நடிக்கின் றனர். இவர்களில் சந்தானம் ஹீரோவாக நடிப்பதை தவிர துணைப் பாத்திரங்களில்  நடிப்ப தில்லை ஆனால் யோகி பாபு தனக்காக வரும் கதைகளில் ஹீரோவாக நடிப்பதுடன் பிற ஹீரோக்களோடும் சேர்ந்து  நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கிறார். இவரைப் போல் தற்போது சதீஷ் தனது பாணியை மாற்றிக் கொண்டு தனக்கென வரும் கதைகளில் ஹீரோவாக நடிப்பதுடன் பிற ஹீரோக் களுடனும் சேர்ந்து நடித்து தனது பட எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் வெற்றி கண்டிருக் கிறார். அந்த வகையில் சதீஷ் தற்போது நடித்திருக்கும் வித்தைக் காரன்  அவர் சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் படமாகும்.

விதைக்காரன் என்றால் விதைகள் செய்து காட்ட வேண்டும் இதற்காக சதீஷ் சில பல மேஜிக் வித்தை களை கற்றுக்கொண்டு படத்தில் அவ்வப்போது மேஜிக் செய்து அசத்துகிறார். அது தான் நடத்தும் திருட்டு தொழிலும் பயன்படுத் துகிறார்.

கப்பலில் வரும் தங்கத்தை எப்படி துறைமுகத்திலிருந்து வெளியில் கொண்டு வருவது என்று ஆனந்த ராஜுடன் சேர்ந்து பிளான் ஏ,  பிளான் பி, பிளான் சி என்று திட்டங்கள் போட்டு ஆனந்தராஜ் கூட்டத்திடம் தங்கத்தை கொடுப்பது போல் கொடுத்து அதை மேஜிக் மூலம் சதீஷ் ஆட்டய போடுவது ருசிகரம்.

விமான நிலையத்தில் இருக்கும் 25 கோடி மதிப்பிலான வைரத்தை அங்கிருந்து எடுத்து வர முயலும் மதுசூதனன், ஆனந்தராஜ், சுப்பிரமணிய சிவா  ஆகியோரின் கூட்டத்தை ஒன்று சேர்த்து குழப்பி அவர்களிடம் இருந்து  வைரத்தை சதீஷ் அபேஸ் செய்வது ரசிக்கும் படியான காட்சிகள்.

தங்கம்,  வைரம் கடத்தல்  கதை என்றதும் ஏதோ பெரிய கேங் வார் நடக்கப் போகிறது என்று எண்ணி  இருந்தால் அங்கு மூன்று கூட்டங் களுக்கு இடையே காமெடி வார்தான் நடக்கிறது.

விமான நிலையத்துக்குள் ஆனந்த ராஜை சதீஷ் துப்புரவு தொழிலா ளியாக மாற்றுவதும்,  சக அடியாட் களை  மேஜிக் செய்து வைரத்தை  கொள்ளையடிப்பதும் மற்றொரு காமெடி கலாட்டா.

படம் முழுவதுமே காமெடி களத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது.
அசகா சூர வில்லன்கள் ஆனந்த ராஜ், மதுசூதனன் இருவரையும் காமெடி பீசாக்கி வெச்சி செய்கி றார் சதீஷ்.

குறிப்பாக வில்லனாக 90களில் நடித்து பயமுறுத்திய  ஆனந்தராஜ் தற்போது வடிவேலு, யோகி பாபு ஏன் சதீஷை கூட மிஞ்சி பெரும்  காமெடி நடிகராக மாறிவிட்டார்.. வில்லனாக நடித்து  சாம்பாதித்ததை விட இனி காமெடியனாக  நடித்து நிறைய சம்பாதிப்பார் என்றே தெரிகிறது. வில்லன்களுக் கெல்லாம் வயதாகி விட்டால் இனி காமெடிக்கு வரலாம் என்று புதிய ரூட்டையும் போட்டு கொடுத்திருக் கிறார் ஆனந்தராஜ்.

ஆனந்தராஜை நோண்டி நோண்டி ஏதாவது ஒன்று கேட்டு ஜப்பான் குமார் அவரை கடுப்பேற்றும் போதெல்லாம், எங்கப்பன் நேபாளத்துக்கு போய் செஞ்ச தப்ப வாழ்க்கை முழுக்க நான் சமாளிக்க வேண்டி இருக்கிறது” என்று அதிரடி வசனம் பேசி அரங்கை அல் லோகல பட வைக்கிறார் ஆனந்தராஜ்.

படத்தில் சதீஷுக்கு சோலோ ஹீரோ வாய்ப்பு கொடுத்த இயக்குனர்  ஒரு ஜோடியை கொடுக்காமல் ஏமாற்றி விட்டிருக்கிறார்.

பெரிய ஹீரோக்களுக்கு தரப்படும் ஓப்பனிங் சாங் போல் சதீஷுக்கும்  ஒரு ஓபனிங் சாங் வைக்கப்பட் டிருக்கிறது  மூச்சை பிடித்துக் கொண்டு தம் கட்டி ஆடி சமாளிக்கி. றார் சதீஷ். நடனக் காட்சிகளில் இன்னும் இயல்பாக ஆட அவர் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும். சில சமயங்களில் அவரது நடன காட்சிகளில் முகத்தில் டென்ஷன் தான் வெளிப்படுகிறது.

சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார்  தொடக்க காட்சியில் அவரை ஏதோ ஒரு துப்பறியும் நிபுணரை போல காட்டி கொஞ்சம் கொஞ்சமாக அவரது மவுசை இறக்கி கடைசியில் அவரை சதீஷின் மாற்றி விடுகி றார்கள்.

ஒயிட் கார்ப்பட் சார்பில் கே விஜய் பாண்டி இப்படத்தை தயாரித்தி ருக்கிறார்.

கதை எழுதி இயக்கி இருக்கிறார் வெங்கி. காமெடி காட்சிகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந் தாலும் பல இடங்களில் கதாபாத் திரங்கள். ரிப்பீட் பஞச்  அடிப்ப தற்கு தவறியதால் சீன் டல்லடிக் கிறது.   இன்னும் கூட ஒரு காமெடி டீமை அமைத்து அவர் நிறைய டிஸ்கஷன் செய்து காமெடி காட்சி களை டவுலப்  செய்திருக்கலாம்.

சதீஷ் ஓப்பனிங்  சாங், , மேஜிக் சீன் என்று  வேகமாக தொடங்கும் காட்சிகள் போகப்போக தொய் வாகி விடுகிறது.. விமான நிலைய காட்சிகள் தான் காமெடிக்கு பெரிதாக கை கொடுத்திருக் கிறது.

வி பி ஆர் இசை கார்த்திக் ஒளிப்பதிவு ஏமாற்றவில்லை

வித்தைக்காரன் கிச்சுகிச்சு மூட்டுவான்.

Related posts

ஜெய்பீம் (பட விமர்சனம்)

Jai Chandran

2 நாளில் ஜீவி-2 பட கதை எழுதிய இயக்குனர்

Jai Chandran

Natty’s Psycho thriller #Web Movie Team Wishing

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend