Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஃப் ஐ ஆர் வெற்றி விழாவில் விஷ்ணு விஷால் கண்ணீர்

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் கடந்த பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளி யான திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரிடத்திலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது,  இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ரெட் ஜெயன்ட் மூவிஸ்   எம்.செண்பக மூர்த்தி , தயாரிப்பாளர், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசளித்தார்.

அமான் பேசியதாவது
இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு மனுவுக்கு, விஷ்ணு விஷால் ஆகியோருக்கு நன்றி. மக்கள் அனைவருக்கும் படம் பிடித்துள்ளது, அவர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

நடிகர் பிரவீன்குமர் பேசியதாவது:
இந்த திறந்த மனதோடு ரசிகர்கள் கொண்டாடியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு மனுவுக்கு, விஷ்ணு விஷால் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தை பார்த்த ஆடியன்ஸ்க்கும், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் அபிஷேக் பேசியதாவது:
வெற்றி மேடையில் நான் பேசுவது இது தான் முதல் முறை. இந்த வாய்ப்பு கிடைப்பது அரிது. விஷ்ணு இதில் உயிரை கொடுத்து உழைத்திருக்கிறார். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் ராம் பேசியதாவது:
இந்த வெற்றிப் படத்தில் பங்கு கொண்டது ரொம்ப சந்தோஷமாக, பெருமையாக இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் இந்த வாய்ப்பு தந்திருக்கலாம், ஆனால் என் திறமையை நம்பி எனக்கு இந்த வாய்ப்பு தந்ததற்கு மனுவுக்கு நன்றி. சினிமாவை நேசித்து உழைக்கும் விஷ்ணுவிற்கு வாழ்த்துக்கள் அதுதான் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. இவர்களது அடுத்தடுத்த படங்களிலும் நான் நடிப்பேன் என நம்புகிறேன் நன்றி.

இட்ஸ் பிரசாந்த் பேசியதாவது:
இங்கு தான் கீழே அமர்ந்து படம் பார்ப்பேன், இன்று இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது வாழ்க்கை. 10 வருடமாக விஷ்ணு பிரதரை தெரியும். அன்றிலிருந்து இப்போது வரை ஒரே மாதிரி பழகுகிறார். இந்த படத்தில் மிக ஜாலியாக வேலை பார்த்தேன். எல்லோரும் மிக நட்பாக உழைத்தோம்.  நான் என்னை நம்பியதை விட, மனு என்னை அதிகமாக நம்பினார். நிறைய இடங்களில் இருந்து பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கிறது. ரைசா நடிக்கும் போது என்னை கிண்டல் செய்து கொண்டே இருப்பார். இது மனு மற்றும் விஷ்ணு விஷாலின் 8 வருட உழைப்பு,  இந்த வெற்றியில் நானும் இருப்பது மகிழ்ச்சி.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசியதாவது:
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. வெற்றிப்படத்தில் இருக்க வேண்டுமென்கிற எனது 8 வருட கனவை இப்படம் நிறைவேற்றியுள்ளது. விஷ்ணு ஒரு நல்ல மனிதனாக என்னை கவர்ந் துள்ளார். இந்த கோவிட் காலத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டோம், அதை மறந்து நம்மை மகிழ்ச்சிபடுத்த இந்த படம் வந்துள்ளது. மனு ஒரு பிரில்லியண்ட் ரைட்டர். இந்தப்படம் முதல் பிரதி பார்த்த போதே மிகப்பெரிய வெற்றிபெறும் என நம்பிக்கை வந்தது.  ரைசாவை படத்தில் அசத்திவிட்டார். அனைத்து நடிகர்களும் அட்டகாசமாக நடித்துள்ளனர். சில்வா  மாஸ்டர் அருமையாக சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். படத்தின் குழு அனைவருக்கும் நன்றி. மற்றும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் நன்றி.

ஜீ.கே.பிரச்சன்னா பேசியதாவது:
பல இடங்களிலிருந்து படத்திற்கு பாராட்டுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தில் வேலை செய்வது சவாலாக இருந்தது. படத்திற் காக நிறைய உழைத்திருக்கிறோம். படம் வெற்றி பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் அஷ்வத் பேசியதாவது:
இது எனது முதல் சக்ஸஸ் மீட், நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது. படத்தை பற்றி அனைவரும் நல்லபடியாக எழுதி யிருந்தார்கள் இந்த வெற்றி இயக்குநரை தான் சாரும், மனுவுக்கு நன்றி. இந்தப்படத்திற்கு ஒவ்வொரு பாடலுக்கும் லிரிகல் வீடியோ செய்து, என் பெயர் போட்டு என்னை விளம்பரபடுத்தி னார்கள் அதற்கு தயாரிப்பு நிறுவனத் திற்கு மிகப்பெரிய நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டதால் இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை எனக்கு தந்த விஷ்ணு பிரதருக்கு நன்றி

டிசைனர் பூர்த்தி பேசியதாவது:
ஒரு வெற்றிப் படத்தில் வேலை செய்தது மிகுந்த மகிழச்சி. என்னை ஆதரித்த படத்தின் குழு அனைவருக்கும் நன்றி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

நடிகர் பிரவீன் கே பேசியதாவது :
எனது நண்பர் மனு,, விஷ்ணு சார், மற்றும் படக்குழு அனைவருக்கும் நன்றி. எங்கள் குழுவில் எல்லோரும் எல்லோரது வேலையையும், மதித்து நடந்தார்கள் அது தான் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன் நன்றி.

நடிகர் வினோத் பேசியதாவது:
எங்களை மாதிரி புது ஆக்டருக்கு இந்த தருணம் மிகப்பெரிது. எங்களை மேடையேற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் எங்களை மதித்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. நடிகராக ஆக வேண்டுமென்பது 15 வருட ஆசை. யாரிடம் கேட்பது என தெரியவில்லை, என்னை நம்பி எனக்கு இந்த ரோலை தந்த மனு சாருக்கு மிகப்பெரும் நன்றி. இந்த குழு என்னுடைய இரண்டாவது குடும்பம். கோவிட் முடிந்து கஷ்டத்தில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்கிய முதல் நாளில் எங்களுக்கு சம்பளம் வந்ததா என கேட்டு, அதை அங்கேயே செக் போட்டு  தரச்சொன்னார் விஷ்ணு சார். சிக்கலான காலங்களில் ஒரு தயாரிப்பாளராக இப்படி நடந்து கொள்வது அவ்வளவு எளிதானதல்ல, அவரின் நல்ல மனதிற்கு அவருக்கு நன்றி.

நடிகர் ராகேஷ்  பேசியதாவது:
நடிகராக இது எனது முதல் படம். என் மீது நம்பிக்கை வைத்து, என்னை நடிக்க வைத்தார் மனு, இந்த குழுவினருக்கும், விஷ்ணு சாருக்கும் நன்றி.

போஸ்டர் டிசைனர் பிரதுள் பேசியதாவது:

மனு எப்படி டிசைன் செய்ய வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தார். என்னுடைய வேலை இதில் பெரிதாக எதுவும் இல்லை. நான் முதலில் டைட்டில் ரெடி செய்தது குள்ள நரிக்கூட்டம் திரைப்படம்  அதற்கு பிறகு மீண்டும்  இந்த வெற்றிப்படத்தில் இருப்பது மகிழ்ச்சி.

தங்கதுரை பேசியதாவது:
இந்தப்படத்தின் கதை கேட்ட போதிலி

Related posts

Vijayantony ‘s KodiyilOruvan Sneak Peek

Jai Chandran

Kabilan Vairamuthu at the Singapore ReadFest event.

Jai Chandran

Sheela Rajkumar rears Jallikattu Bull

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend