Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தொடக்கம்

விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த. எஸ். வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக் கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் .

விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத் திரங்களில் சுனில் வர்மா ,நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் .

ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சி களை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் .

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது .

தொழில் நுட்பக்குழு விவரம்:
எழுத்து & இயக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பு எஸ். வினோத்குமார் மினி ஸ்டுடியோ. இசை  ஜி வி பிரகாஷ்குமார். ஒளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம். படத்தொகுப்பு விஜய் வேலுக்குட்டி. கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் .  சண்டைப்பயிற்சி  கனல் கண்ணன், , பீட்டர் ஹெயின், ரவிவர்மா. உடைகள் – சத்யா என்.ஜெ. நடனம் தினேஷ் , அஸார். பாடல்கள் மதுர கவி ,அஸல் கோலாறு. நிர்வாக தயாரிப்பு  சொக்கலிங்கம் . மக்கள் தொடர்பு  ரியாஸ் கே அஹ்மத். புகைப்படம் -ஆர்.எஸ். ராஜா விளம்பர வடிவமைப்பு-கபிலன்.

Related posts

தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆவது எப்படி ?

Jai Chandran

டெல்லி: ஆக்ஸிஜன் இல்லாததால் 25 நோயாளிகள் பலி கெஜ்ரிவால் உருக்கமான கடிதம்..

Jai Chandran

Nee Podhum Kanna 1st Single From Kasadat Tabara

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend