Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் ஆண்டனியின் “ரத்தம்” பட இந்திய படப்பிடிப்பு நிறைவு !

இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ்  வழங்கும், இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இந்திய படப்பிடிப்பு நிறைவு பெற்றது !

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது நடிப்பில் பல படங்கள், தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. அதில், கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோரால் Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கப்படும், சி.எஸ்..அமுதன் இயக்கும் ‘ரத்தம்’ படமும் ஒன்று. வேகவேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு பணிகளில், தற்போது படக்குழு இந்திய படபிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில் துவங்கவுள்ளது.

முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் “ரத்தம்” படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), ஒ ஏ கெ சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன், ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கண்ணன் (இசை), கோபி அமர்நாத் (ஒளிப்பதிவு), சுரேஷ் (எடிட்டிங்), திலிப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர். தவிர, தெருக்குரல் அறிவு “ரத்தம்” திரைப்படத்தில் ஒரு தீம் பாடலை எழுதியதோடு, பாடலை பாடியுமுள்ளார்.

இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ்     சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி..பிரதீப், பங்கஜ் போரா & எஸ்..விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களில் பணியாற்றி வருகின்றார். அப்படங்கள் 2022-ல் வெளியாகவுள்ளது.

Related posts

” கடமையைச் செய் ” படக்குழு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கொரோனோ நிதி

Jai Chandran

83 ADVANCE BOOKINGS OPEN!

Jai Chandran

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend