Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜூன்9 ல் மகாபலிபுரத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் திருமணம்

பிரபல நடிகை நயன்தாரா, இயக்குனர் விகேஷ் சிவனுக்கு இடையே நானும் ரவுடிதான் படத்தின்போது காதல் மலர்ந்தது.  அன்றுமுதல் இணைபிரியாத காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். சுமார் 8 வருடத்துக்கும்  மேலாக இவர்கள் காதல் நீடித்தது.  அவ்வப்போது  இருவருக்கும் திருமணம் நடந்துவிட்ட தாக வதந்தியும்   பரவிய வண்ணம இருந்தது. ஆனால் நயன்தாரா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் திருமணம் த்ள்ளிப்போனது.

காத்திருந்த காலம்   வீண்போகவில்லை விக்னேஷ்  சிவன்,  நயன்தாரா காதல் கைகூடி வந்திருக்கிறது.  இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டது.  ஆனால் சில காரணங்களால் அங்கு திருமணம் நடக்கவில்லை. அதற்கு  பதிலாக ஏற்கனவே முடிவு செய்ததுபோல் வரும்  ஜூன் 9 ம்  தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடக்க உள்ளது.

திருமணம் குறித்து விக்னேஷ் சிவன் இன்று கூறியதாவது.

போடா போடி படத்தின் மூலம. இயக்குனராக  திரையுலகுக்கு வந்தேன். அடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினேன். பிறகு வசனகர்த்தா, பாடலாசிரியர். தயாரிப்பாளர்,  என நான் ஈடுபட்ட துறைகளில் எனக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்தீர்கள்.. தற்போது  எனது காதலி நயன்தாராவை மணக்கிறேன். இது என் வாழ்க்கையின் அடுத்த கட்டம், சினிமா துறையில் எனக்கு ஆதரவு அளித்தது போல், என் இல்லற வாழ்விலும் உங்கள் வாழ்த்து எதிர்பார்க்கிறேன்.

ஜூன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடக்கிறது.  முன்னதாக எங்கள் திருமணம் திருப்பதியில் நபத்த திட்டமிடப்பட்டது. ஆனால் எல்லோரையும் அங்கு அழைத்து செல்வது கடினம். அதனால் எங்கள் திருமணத்தை  மகாபலிபுரத்தில் நடத்த.. திட்டமிட்டிருக் கிறோம் .

இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறினார்.

பேட்டியின்போது பி ஆர் ஒ சுரேஷ் சந்திரா உடனிருந்தார்.

 

,

Related posts

Sambar Cartel Studios Producer Abishek Murali Statement..

Jai Chandran

களை கட்டும் பிக்பாஸ் சீசன் 8 , ஆரம்பமே அதிர்ச்சி

Jai Chandran

Sherif Master Launches India’s First Dance OTT Platform

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend