Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வேடுவன் (வெப் சீரிஸ்) விமர்சனம்

படம்: வேடுவன் (வெப் சீரிஸ்)

நடிப்பு: கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஶ்ரீ காந்த், ஐஸ்வர்யா ரகுபதி, விணுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி

தயாரிப்பு: ஸ்ரீநிதி சாகர் ,
மற்றும் zee5 original

இசை: விபின் சாகர்

ஒளிப்பதிவு: சீனிவாசன் தேவராஜ்

இயக்கம்: பவன்

ரிலீஸ்: ZEE5 ORIGINAL OTT தளம்

பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா

கதை:
வளர்ந்து வரும் நடிகர் சூரஜுக்கு (கண்ணா ரவி) என்கவுண்டர் போலீஸ் அருண் வாழ்க்கை கதையில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் தனது கல்லூரி காதலியின் கணவனை (சஞ்சீவ்) என்கவுண்டர் செய்கிறார். ஆனால் அவரோ பலருக்கும் நன்மைகள் செய்து ஊரில் மக்களின் மதிப்பை பெற்றவராக இருக்கிறார். இதனால் குழப்பமடையும் அருண் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். நல்லவர் ஒருவரை சுட்டுக் கொன்று விட்டோமோ என மனவேதனையில் துடிக்கிறார். இதில் அருண் எடுக்கும் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

ஒரு வெப் சீரிசை திரைப்படம் போல் உருவாக்க முடியும் என்பதற்கு வேடுவன் சரியான சான்று. ஒரு பிரேம் கூட போரடிக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு படத்தின் முதல் காட்சி தொடங்கி கிளைமாக்ஸ் வரை ரசிகர்கள் இடத்தை விட்டு நகராமல் கட்டிப்போட்டு விடுகிறது. வேடுவன் வெப் சீரிஸ்.

கண்ணா ரவி திறமையான நடிகர் என்று இதுவரையில் வாய் மொழியாக கேட்டுக் கொண்டிருந்த வார்த்தையை இந்த வேடுவன் வெப் சீரிஸில் சூரஜ், அருண்மொழி வர்மன் என இரு மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் அருண் கதாபாத்திரத்திற்கு அவர் எப்போது மாறுகிறார், மீண்டும் அவர் சூரஜ் கதாபாத்திரத்திற்கு எப்போது உருமாறுகிறார் என்பது தெரியாமல் தனது இயல்பான நடிப்பால் மனதில் ஆணி அடித்தார் போல் வலுவான இடத்தை பிடித்துக் கொள்கிறார்.

வெள்ளுடை அணிந்த கட்டப்பஞ்சாயத்து ரவுடி கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் கூட இதுவரை இப்படியொரு கதாபாத்திரம் சஞ்சீவிக்கு அமைந்ததில்லை. அந்தளவுக்கு வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தன் மனைவியின் கல்லூரி தோழன் என்று தெரிந்தும் கண்ணா ரவியை தன் மனைவி விணுஷா தேவி,மற்றும் குழந்தைகளுடன் சகஜமாக பழகுவதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் அன்பான பார்வை பார்த்து “எடுக்கவோ கோர்க்கவோ” என்று சொன்ன துரியோதனாக கண் முன் உயர்ந்து நிற்கிறார் சஞ்சீவ்

கண்ணா ரவியின் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கணவன் மீது சந்தேகம் கொள்ளாத, ஆண்கள் எதிர்பார்க்கும் குணம் கொண்ட மனைவியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கண்ணா ரவியின் கல்லூரி காதலியாக சாந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விணுஷா தேவி தமிழில் ஒரு நந்திதா தாஸ் கிடைத்திருக்கிறார் என்று எண்ணும் அளவுக்கு அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கல்லூரி மாணவியாக ஒரு தோற்றம், ரவுடியின் மனைவியாக இன்னொரு தோற்றம் என உடல் தோற்றத்திலேயே வித்தியாசம் காட்டியி ருக்கும் விணுஷா தேவி,
எல்லா பாத்திரங்களையும் முந்திக்கொண்டு ரேசில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

இயக்குனர் பவன் இப்படி ஒரு கதையை எப்படி யோசித்தார் என்பதை விட இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை எப்படி சித்தரித்தார் என்பதுதான் ஆச்சரியம். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு காட்சியும் ஒரு சிலையை செதுக்குவது போன்ற வேலையை இயக்குனர் பவனிடம் வாங்கியிருக்கிறது.

இந்த வெப் சீரிசுக்கு கதை, நடிகர், நடிகைகள் ஒரு பலமென்றால் இன்னொரு பலமாக விபின் சாகர் இசை தூணாக தாங்கி நிற்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் சீனிவாசன் தேவராஜ் கைவண்ணம் வெப் சீரிஸ் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

அயலி, ஐந்தாம் வேதம் என தரமான வெப் சீரிஸ்களை வழங்கி வரும் ZEE5 ஒரிஜினல் அந்த பட்டியலில் இன்னொரு வைரத்தை பாதிக்கும்படியான வேடுவன் வெப் சீரிசை வழங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட கதைகளை தீர்க்கமாக முடிவு செய்து தயாரித்தளிக்கும் zee5 தலைவர் ( south) கவுசிக்கின் பணி பாராட்டுக்குரியது.

ரயில் எரிப்பு , என்கவுண்டர் போன்ற பல்வேறு தீர்ப்புகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையை கேள்வி கேட்கும் துணிச்சலான கதையாக வேடுவன் உலா அக்டோபர் பத்தாம் தேதி முதல் Zee5 ஓடிடி தரத்தில் தொடங்கி இருக்கிறது.

வேடுவன் – மறைக்கப்பட்ட உண்மைகளை வேட்டையாடுகிறான்.

Review By
K.Jayachandhiran
trendingcinemasnow.com

Related posts

வசூலில் தொடர் சாதனை படைத்து வரும் பிரபாஸ்

Jai Chandran

எங்களையும் அறியாமல் கண்ணீர் வரும்: சிவகுமார் உருக்கம்..

Jai Chandran

100 சதம் டிக்கெட் அனுமதி: மாயத்திரை ஆடியோ விழாவில் முதல்வருக்கு குஷ்பு கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend