Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வாலி மோகன்தாஸ் இயக்கும் ரங்கோலி..

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”. இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் ஆகியோரின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் ”ரங்கோலி” திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. .

மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இசை கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு மருதநாயகம். மக்கள் தொடர்பு  சதீஷ் (AIM).

Related posts

வாகோ இந்தியா கிக் பாக்ஸிங், குத்துச்சண்டை

Jai Chandran

1000-year mystery A Gripping Suspense-Thriller

Jai Chandran

Mohanlal’s ‘Vrusshabha’ Wraps Shoot

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend