Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வாஸ்கோடகாமா (பட விமர்சனம்)

படம் : வாஸ்கோடகாமா

நடிப்பு: நகுல், கே எஸ். ரவிக்குமார், பயில்வான் ரங்கநாதன், ரெடின் கிங்ஸ்லி,  அர்த்தனா பினு,  மன்சூர் அலிகான், மதன் பாப், முனிஸ் காந்த் மற்றும் பலர்

தயாரிப்பு: டத்தோ பா சுபாஸ்கரன்

இசை: அருண் என் வி.

ஒளிப்பதிவாளர்: என் எஸ் சதீஷ்குமார்

இயக்கம்:  ஆர் ஜி கே

பி ஆர் ஓ: சக்தி சரவணன்

 

எதிர்காலத்தில் நல்லவர்களே  இருக்க மாட்டார்கள், முழுக்க முழுக்க கெட்டவர்கள் தான் வாழ்வார்கள். யாராவது நல்லது செய்தால் அல்லது  உதவி செய்தால் அவர்களை போலீஸ் சிறையில் அடைக்கும் என்ற வித்தியாசமான கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது வாஸ்கோடகாமா.

நகுல் சிலருக்கு நல்லது செய்ய முற்படுகிறார். ஆனால் அவருக்கு தங்குவதற்கு வீடு கூட கிடைக்க வில்லை. ரவுடித்தனம் செய்கிறேன்,  தீவிரவாதியாக இருக்கிறேன் என்று சொன்ன பிறகு தங்குவதற்கு வீடு கிடைக் கிறது. இந்நிலையில் சிறையில் இருக்கும் தனது தந்தையை கொல்ல ஒருவன் திட்டம் தீட்டுகிறான் என்பதை அறிந்ததும் அவரைக் காப்பாற்ற நல்லது செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார் நகுல். சிறையில் இருக்கும் கே எஸ் ரவிக்குமார்தான்  நகுலின் தந்தை என்பது தெரியவருகிறது. அவரை கொலை செய்ய சிறைக்கு வந்தது யார், கொலையாளியிடம் இருந்து தந்தையை நகுலால் காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து  பதில் சொல்கிறது வாஸ்கோடகாமா.

எல்லா யுகங்களும் தோன்றி மறைந்து கலிகாலம் முற்றிய நிலையில் மக்கள் சுயநலவாதி களாக மாறி விடுகிறார்கள். நல்லவர்களை பார்ப்பது அரிதாக இருக்கிறது, எங்கு பார்த்தாலும் கொலையாளிகள் திருடர்கள் போக்கிரிகள் நிறைந்து வழிகிறார்கள்  ஊர் எங்கும்  போதை பொருள்,  சாராயம் விற்கப்படுகிறது, யாராவது நல்லது செய்தால் உடனே அவர்கள் சிறையில் கொண்டு சென்று அடைக்கப்படுகிறார்கள் ஏற்கனவே மேலே குறிப்பிட்ட  இந்த சம்பவங்கள் தான் படத்தில் முழுமையாக நடக்கிறது.

ஹீரோ நகுல்  நல்லது செய்யும் இளைஞராக வருகிறார். ஊரில் எல்லோரும் அம்மணமாக திரியும்போது ஒருவன் மட்டும் கோவணம் கட்டினால் அவனை எப்படி பார்ப்பார்களோ அப்படித் தான் நகுலின்  நிலையாக இந்த ஹீரோ பாத்திரத்தில் நடிக்க வேண்டி இருக்கிறது.

திக்கி திணறி அவர் ஒரு வழியாக. ஜெயிலில் கொண்டு போய்  விடப்படுகிறார்.  அந்த ஜெயிலுக்கு தான் வாஸ்கோடகாமா என்று பெயர். அதற்கு தலைமை அதிகாரியாக சிரிப்பு மன்னன் மதன் பாப் இருக்கிறார் பிறகு சிரிப்புக்கு கேட்க வேண்டுமா? சீனுக்கு சீன் நேர் மாறாக காட்சிகள் அமைத்து சிரிப்பு சில்லறையை சிதற விட்டிருக்கிறார் இயக்குனர்.

சிறைக்குள் யாராவது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தால் உடனே அவர்களை சிறையில் இருந்து விடுவித்து ஊருக்குள் அனுப்பி விடும் சிறை விதியை கேட்டாலே காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியும்.

சிறையில் இருந்து நகுல் தப்பிக்க முயலும் போது அவருக்கு சிறை அதிகாரிகளே செலவுக்கு காசு கொடுத்து அனுப்பி வைப்பதை எப்படித்தான் இயக்குனர் யோசித்தாரோ தெரியவில்லை.! மெனக்கெட்டு ஒவ்வொரு காட்சிகளுக்கும் நெகட்டிவாக சிந்தித்து காட்சிகளை அமைக்க பெரும்பாடுதான் பட்டிருப்பார் போலிருக்கிறது.

நகுல் தந்தையாக கே எஸ் ரவிக்குமார் வருகிறார். அவரது கதாபாத்திரத்தில் சிறிய சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டிருக் கிறது. சஸ்பென்ஸ் உடையும்போது ஆச்சரியம் மேலிடுகிறது.

ஆனந்தராஜ் மன்சூர் அலிகான் என அசகாசூர வில்லன்கள் எல்லாம் இதில்  காமெடியன்களாக மாற்றப்பட்டு இருக்கிறார்கள். போதாக்குறைக்கு முனீஸ்காந்த், ஆர் எஸ் சிவாஜி போன்றவர்களும் காமெடிக்கு பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள்

கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்திருக்கிறார். அவருக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை அட்லீஸ்ட் நகுல் உடன் இரண்டு குத்தாட்டமாவது போட வைத்திருக்கலாம். ஏன் மிஸ் செய்தார்களோ தெரியவில்லை.

கதையை வித்தியாசமாக இயக்குனர் ஆர் ஜி கே யோசித்திருந்தாலும் அதற்கேற்ற பின்னணி அரங்குகள் காஸ்ட்யூம்கள்  போன்றவற்றையும் மாற்றி இருந்தால் காட்சிகளில் வித்தியாசத்தை காட்டி இருக்கலாம்.  முழுக்க முழுக்க வசனத்தை நம்பியே படத்தை இயக்கி இருக்கிறார்  இயக்குனர்.

அருண் என் வி. இசை, என் எஸ் சதீஷ்குமார்  ஒளிப்பதிவு நார்மல்.

டத்டோ சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.

வாஸ்கோடகாமா – இடுப்பில் கிச்சுகிச்சு.

 

 

 

 

 

 

 

 

Related posts

புறா படம் “பைரி” ஆண்டின் சிறந்த சம்பவம்: யாத்திசை இயக்குனர் பேச்சு

Jai Chandran

வீரர் ராஜா முத்துப்பாண்டியை பாராட்டிய சிம்ரன்..

Jai Chandran

பெண் போலீஸ் அதிகாரிக்கு கமல்ஹாசன் பாராட்டு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend