கார்த்திக் தாஸ் இயக்கி நடிக்கும் படம் வரிசி. வரிசி முயற்சி படைப்பகம் தயாரித்துள்ள முதல் படைப்பு.. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குனர் ஹீரோ கார்த்திக் தாஸ் பேசியதாவது:
வரிசி படத்தில் பணியாற்றி இருக்கும் அனைவரும் சினிமாவுக்கு புதியவர்கள். ஆனால் ஏற்கனவே குறும்படத்தில் இதில் பலர் இணைந்து பணியாற்றி உள்ளோம்.
வரிசி ஒரு ஜோடியின் கதை
மட்டுமல்ல 40 வயது ஜோடி 30வயது ஜோடி, 25 வயது ஜோடி உள்ளிட்ட 4ஜோடி களின் வாழ்க்கை, காதல், மகிழ்ச்சி என எல்லாவற் றையும் சொல்லும் கதை. இதில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் நடிப்பை முழுஈடுபாடுடன் வழங்கி இருப்பதுடன், கடுமையாக உழைத்திருக் கிறார்கள்.
ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர், பாடலாசியர் என அனைத்து தொழில் நுட்ப கலைஞர் களும் தங்களது சிறப்பான பணியை வழங்கி உள்ளனர்.
எங்கள் படக் குழு தூரத்தில் இருக்கும் தீவை ( சினிமா ) பார்த்து ஏங்கிக்கொண் டிருந்தோம். அதற்காக அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பயணியத் துள்ளோம். இப்போது நாங்கள் தீவை நெருங்கி விட்டோம். அங்கு அனைவரும் சென்றடைய உதவிக்கு கையை உங்களை நோக்கி உயர்த்தி நீட்டி காத்திருக்கிறோம்.
இவ்வாறு கார்த்திக் தாஸ் பேசினார்.
மேலும் நிகழ்ச்சியில் நடிகர் கள் கணேஷ், ஆவிஸ் நடிகைகள் சப்னா, ஜெயஸ்ரீ, துஷரா, ஒளிப்பதிவாளர் மிதுன், இசை அமைப்பாளர் நந்தா, பாடலாசிரியர் உமா ரமணன் மற்றும் கிருஷ்ண குமார், பாலாஜி ராஜசேகரன் உள்ளிட்டவர்கள் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசினார்கள் மூத்த பத்ரிகையாளர் தேவி மணி ஆடியோவை வெளியிட படக்குழு பெற்றுக் கொண்டது. கவிஞர் கு. கார்த்திக் வாழ்த்தி பேசினார்.
வரிசி படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அனுபமா குமார், வாய் பேசாத துஷாரா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் தாஸின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் பல கலைஞர்களின் திரை கனவை நினைவாக்கும் பெரும் முயற்சி. இத்திரைப்படத்தில் பணியாற்றியிருக்கும் பல கலைஞர்களுக்கு இதுவே முதல் திரைப்படம்.
வரிசி என்றால் என்னவென கேட்டதற்கு வரிசி என்றால் மீனவர்கள் மொழியில் தூண்டில் என்று கார்த்திக் தாஸ் கூறினார். இத்திரைப்படம் காதல், நட்பு, நகைச்சுவை, திகிலென பல்சுவைகளின் விருந்தாகவிருக்கும். மேலும் சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் அவலங்களை பற்றியும் வலுவாக பேசும்.