Trending Cinemas Now
தமிழ் செய்திகள்

மனித இயந்திரம் போன்று செயல்படும் ஜூனியர் என் டி ஆர்

வார் 2 படத்தில் ஜூனியர்என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது!’ : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா*

வார் 2 டீசரில் ஜூனியர் என்.டி.ஆர் அவரது காந்த, சிந்தனைமிக்க தோற்றத்தில் தனித்து நின்றார்..2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார் 2 படத்தில், என்.டி.ஆரின் கதாபாத்திரம் ஸ்டைல் மற்றும் ஆக்ரோஷத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததை ரசிகர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் எவ்வாறு அன்பைப் பொழிந்துள்ளனர் என்பதைக் கண்டு ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா மிகவும் மகிழ்ச்சியடைவதாக பகிர்ந்துள்ளார் .

நாட்டின் சிறந்த ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா கூறியதாவது:
வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆரின் தோற்றத்தை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் என நான் விரும்பினேன் .அதன்படி, “வார் 2 படத்தின் மூலம் முதல் முறையாக ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து வேலை செய்வதில் முழுமையான மகிழ்ச்சி .ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கதாபாத்திரத்தில் புன்னகை, அரவணைப்பு போன்ற ஆழமான, அமைதியான கதாபாத்திரத்தை நீங்கள் காண்பீர்கள் .அவர் படத்தின் ஆரம்பத்திலிருந்தே இந்த கதாபாத்திரம் யார் என்பதை சரியாக அறிந்திருந்தார்.”

அவர் மேலும் கூறுகையில், “அவரது தோற்றத்தால், நான் அவரை நிலைநிறுத்த விரும்பினேன். அதற்காக அவர் மிகவும் சிரமமின்றி சுமக்கும் வகையில் மனித இயந்திரம் போல உள்ள ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளேன் .இந்த உடைகள் தோல், கரடுமுரடான ஜாக்கெட்டுகள் கொண்ட அமைப்பாகும் .

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 திரைப்படத்தில் ஹிருத்திக் ரோசன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வார் 2 வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Related posts

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டி: உதயநிதி பங்கேற்பு

Jai Chandran

கே வி ஆனந்த்துக்கு கமல்ஹாசன், தனுஷ், ஷங்கர் இரங்கல்

Jai Chandran

கலையரசன் – ஷேன் நடிக்கும் மெட்ராஸ்காரன் டீஸர் வெளியீட்டு விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend