Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேஜா சஜ்ஜாவின் ஹனு-மான் முதல் பார்வை போஸ்டர்

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் ஹனு-மான் முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார்

இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள், அவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள். தனித்துவமான உள்ளடக்கத்தைக் கொண்ட வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவது இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் தனிச்சிறப்பாகும். அதன் தொடர்ச்சியாக,  அவரது அடுத்த திரைப்படமான ஹனு-மான் இந்தியத் திரையில் புதுமையான முயற்சியாக இருக்கும்.

முதல் அனைத்திந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மானுக்காக  சோம்பி ரெட்டி கூட்டணி மீண்டும் இணைகிறது. ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகும் ஹனு-மானுக்காக இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுடன் பிரசாந்த் வர்மா கைகோர்த்துள்ளார். ஏற்கனவே கூறியபடி, முதல் பார்வை போஸ்டரையும் அஞ்சனாத்ரி உலகத்திலிருந்து ஹனுமந்துவை அறிமுகப்படுத்தும் 65 வினாடிகள் காணொலியையும் படத்தின் குழு வெளியிட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் இவற்றை வெளியிட்டுள்ளார்.

பிரமாண்ட திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை மிகவும் அருமையாக அமைந்துள்ள முதல் பார்வை போஸ்டர் மற்றும் காணொலி அதிகரிக்கின்றன. தேஜா சஜ்ஜா அடர்ந்த காட்டில் உள்ள ஒரு மரத்தின் மேல் நின்று கொண்டு தனது இலக்கை ஒரு உண்டிகோல் மூலம் குறி பார்ப்பதை காணலாம். சூப்பர் ஹீரோவாக நடிப்பதற்காக கடும் பயிற்சிகளை அவர் மேற்கொண்டார்.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடைகளும், காலணியும் கவனத்தை ஈர்க்கின்றன. ஒலி வடிவமைப்பும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றன. அஞ்சனாத்ரிக்கு செல்லும் ஆர்வத்தை முதல் பார்வை போஸ்டர் மற்றும் காணொலி தூண்டுகின்றன.

வி எஃப் எக்ஸ் நிறைந்த படமாக ஹனு-மான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் சாகசம் நிறைந்த சண்டை காட்சிகளும் இருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளிவரவுள்ளது.
பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிகின்றனர்.  படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடக்கிறது, அங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

K.நிரஞ்சன் ரெட்டி படத்தை தயாரிக்கிறார், திருமதி சைதன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளர் மற்றும் குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பங்களிக்கின்றனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

நடிப்பு: தேஜா சஜ்ஜா

தொழில்நுட்ப குழு:

எழுத்து & இயக்கம்: பிரசாந்த் வர்மா
தயாரிப்பாளர்: K. நிரஞ்சன் ரெட்டி
தயாரிப்பு நிறுவனம்: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்
திரைப்படத்தை வழங்குபவர்: திருமதி சைதன்யா
திரைக்கதை: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே
ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்திரா
நிர்வாக தயாரிப்பாளர்: அஸ்ரின் ரெட்டி
லைன் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
இணை தயாரிப்பாளர்: குஷால் ரெட்டி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீநாகேந்திரா தங்கலா
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
ஆடை வடிவமைப்பாளர்: லங்கா சந்தோஷி

Related posts

வரிசி (பட விமர்சனம்)

Jai Chandran

தேர்தல் வாக்குறுதிகள், பட்ஜெட்டில் திட்டங்களாகுமா? மநீம கேள்வி

Jai Chandran

Sabhaapathy Trailer hits 3M+ views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend