Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள்  என்,சுபாஷ் சந்திரபோஸ், ஜே.எஸ்.கே.சதீஸ்குமார், துணை தலைவர் சிங்கார வடிவேலன் ஆகீயோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும். அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து இந்த படம் வெளியிடனும்னா ‘AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்டணும் என்று சொல்வது எந்தவகையிலும் நியாயம் இல்லை. அந்த தீய சக்திகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும். ‘AAA’ படம் சம்பந்தமாக நிறைய பிரச்சினைகள் இருந்தது. அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த படத்தின் கதாநாயகன் திரு. சிம்பு அவரது சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார். மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. ‘AAA’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன்பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டபஞ்சாயத்து மூலமாக பேசியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே இந்த பிரச்சினையை நீதிமன்றத்தில் தான் பார்த்து கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு நாங்கள் கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்துவிடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் மீண்டும் ஒருமுறை எங்களது கண்டத்தை தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Related posts

சினிமாவில் அறிமுகமாகும் நடிகை ஜிஜ்னா

Jai Chandran

அம்மா உணவக பெயர் பலகை நீக்கியவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..

Jai Chandran

Pan India Film Suryavin Sanikizhamai Launched Grandly

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend