சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ ஆலோசகருமான டி.ராஜேந்தர், சீமான் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.