Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஸ்வீட் ஹார்ட் (பட விமர்சனம்)

படம்: ஸ்வீட் ஹார்ட்

நடிப்பு: ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரர், பவுசி

தயாரிப்பு: யுவன் சங்கர் ராஜா

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: பாலாஜி சுப்பிரமணியம்

இயக்கம்: ஸ்வினீத்.எஸ்.

பி ஆர் ஓ: யுவராஜ்

வாசு (ரியோ ராஜ்), மனு (கோபிகா ரமேஷ்) நட்பாக பழகுகின்றனர். ஒரு கட்டத்தில் வாசுவை காதலிக்கும் மனு திருமணம் செய்ய கேட்கிறார். அதை வாசு ஏற்கவில்லை. இந்நிலையில் அவர்களுக்குள் சமாச்சாரம் முடிகிறது. தான் கர்ப்பமானதை காரணம் சொல்லி திருமணம் செய்ய கேட்கிறாள் மனு. அதற்கு சம்மதிக்காத வாசு கருவை கலைக்க சொல்கிறான்
இந்த முரண் எங்கு சென்று முடிகிறது என்பதை சென்டிமெண்ட் டச் உடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.

இதுவரை பார்த்த ரியோ ராஜ் வேறு, இந்த படத்தில் நடித்திருக்கும் ரியோ வேறு என்று சொல்லும் அளவுக்கு ஒரு ரோமியோவாக வலம் வருகிறார்.

ரியோவின் காதலியாக கோபிகா நடித்திருக்கிறார். ரியோவுடன் நெருக்கமோ நெருக்கம் இருவரும் பின்னி பிணைந்து நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் சம்பவம் நடந்த பிறகு காதலியின்
கர்ப்பத்தை கலைக்க ரியோ, டாக்டரிடம் அலையும் காட்சி தொடங்கி அதுவே முக்கால்வாசி படத்தை விழுங்கி விடுகிறது.

ரியோ ராஜ் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்வதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. அது உறுத்தலாக இருந்தாலும் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளும் விதமாகவே உள்ளது.

ரியோவின் நண்பராக வரும் 10 நிமிஷ டைம்காரர் அருணாசலேஸ்வரர் காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார் . மற்றபடி கோபிகா ரமேஷுக்கு வீட்டுக்குள்ளேயே செக் வைக்க ஒரு குட்டி பிசாசு உள்பட குடும்பமே இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா தயாரித்திருப்பதுடன் ஸ்பெஷல் இசை அமைத்திருக்கிறார்.

பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு தெளிவு.

புதுமுக இயக்குனர் ஸ்வினீத் .எஸ். சிங்கிள் லைனை உருட்டி திரட்டி படமாக்கி இருக்கிறார். முதல் பாதியில் ஒரே இடத்தில் கதை சுற்றிவருவது சலிப்பு. அதற்கு கொஞ்சம் கத்தரிபோட்டு வெட்டி ஏறிந்தால்தான் இரண்டாம் பாதி சென்டிமெண்ட்டை ரசிக்க ஆடியன்சுக்கு தெம்பிருக்கும்

ஸ்வீட் ஹார்ட் – ஆங்ரி ஹார்ட்.

Related posts

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்

Jai Chandran

Power Song from JaiBhim, Full song out today @ 5⃣ PM..

Jai Chandran

Actor Anupam Kher proud of the Tamil “Connect”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend