Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ், கார்த்தி, நயன்தாராக்கு தமிழக அரசு விருது..

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த நடிகர் நடிகை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்த விருதுகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாக தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரையி​லான 6 ஆண்​டுகளுக்​கான திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

திரைப்​பட விருதுகள்​ வழங்​கும்​ விழா பிப்ரவரி 13-ம்​ தேதி ​மாலை 4.30 மணிக்​கு சென்​னை கலை​வாணர்​ அரங்​கில்​ நடை​பெறுகிறது. விருதுகளை துணை முதல்​வர்​ உதயநிதி ஸ்​டா​லின்​ வழங்குகிறார்.
விருது பெறும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் விவரங்கள் வருமாறு:

சூர்​யா, கார்த்​தி, தனுஷ் , பார்த்திபன், விஜய்​சேதுப​தி, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகராகவும், கீர்த்தி சுரேஷ், நயன்​தா​ரா, ஜோதிகா, மஞ்​சு​வாரி​யர், அபர்​ணா​பால​முரளி, லிஜோமோல்​ஜோஸ், சாய்​பல்​லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாக​வும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அதே​போல், 2014ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை​யான சிறந்த டிவி நெடுந்​தொடர்​கள், கதா​நாயகன், கதா​நாயகி, வாழ்​நாள் சாதனை​யாளர், தொழில்​நுட்​பக் கலைஞர்​களுக்கு சின்​னத்​திரை விருதுகளும், 2015 -16 கல்​வி​யாண்டு முதல் 2021 – 22 கல்​வி​யாண்டு வரை தமிழ்​நாடு அரசு எம்​ஜிஆர் திரைப்​படம் மற்​றும் தொலைக்​காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் தேர்வு செய்​யப்​பட்டு அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

மாநகரம், அறம், பரியேறும் பெரு​மாள், அசுரன், கூழாங்​கல், ஜெய்​பீம், கார்கி ஆகியவை சிறந்த திரைப்​படங்​களாக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன.
சின்​னத்​திரை விருதுகளுக்​காக நடிகர்​கள் ஆர்​.​பாண்​டிய​ராஜன், கவுசிக், கிருஷ்ணா, தலை​வாசல் விஜய், வ.சஞ்​சீவ், ஜெய்​ஆ​காஷ், கார்த்​திக்​ராஜ் ஆகியோர் சிறந்த கதா​நாயகர்​களாக​வும், நடிகைகள் ரா​திகா சரத்​கு​மார், வாணி​போஜன், நீலி​மா​ராணி, சங்​க​வி, ரேவ​தி, ரேஷ்​மா, சபானா ஷாஜ​கான், கெபரல்லா செல்​லஸ், சைத்ரா ஆகியோர் சிறந்த கதா​நாயகி​களாக​வும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அழகி, ரோமாபுரி பாண்​டியன், இராமனுஜர், நந்​தினி, பூவே பூச்​சூட​வா, செம்​பருத்​தி, இரா​சாத்​தி, சுந்​தரி, எதிர்​நீச்​சல் ஆகிய தொடர்​கள் சிறந்த நெடுந்​தொடர்​களாக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன.
தமிழக அரசால் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள சிறந்த திரைப்​படங்​களுக்கு முதல் பரி​சாக ரூ.2 லட்​ச​மும், 2-ம் பரி​சாக ரூ.1 லட்​ச​மும், 3-ம் பரி​சாக ரூ.75 ஆயிர​மும், சிறப்​புப் பரி​சாக ரூ.75 ஆயிர​மும், பெண்​களைப் பற்றி உயர்​வாக சித்​தரிக்​கும் படத்​துக்கு சிறப்​புப் பரிசு ரூ.1.25 லட்​ச​மும் வழங்​கப்​படு​வதுடன், சிறந்த நடிகர், நடிகையர் சிறந்த தொழில்​நுட்​பக் கலைஞர்​களுக்கு தலா 1 பவுன் தங்​கப்​ப​தக்​கம், நினை​வுப் பரிசு மற்​றும் சான்​றிதழும் வழங்​கப்​படு​கின்​றன.

சின்​னத்​திரை சிறந்த நெடுந்​தொடர்​களுக்கு முதல் பரி​சாக ரூ.2 லட்​ச​மும், 2-ம் பரி​சாக ரூ.1 லட்​ச​மும், ஆண்​டின் சிறந்த சாதனை​யாளர் பரி​சாக ரூ.1 லட்​ச​மும், ஆண்​டின் வாழ்​நாள் சாதனை​யாளர் பரி​சாக ரூ.1 லட்​ச​மும் வழங்​கப்​படு​வதுடன், சிறந்த கதா​நாயகன், கதா​நாயகி, சிறந்த தொழில்​நுட்​பக் கலைஞர்​களுக்கு தலா 1 பவுன் தங்​கப்​ப​தக்​கம், நினை​வுப்​பரிசு மற்​றும் சான்​றிதழும் வழங்​கப்​படு​கின்​றன.

தமிழ்​நாடு அரசு எம்​.ஜி.ஆர். திரைப்​படம் மற்​றும் தொலைக்​காட்​சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்ட மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்​கம், நினை​வுப்​பரிசு மற்​றும் சான்​றிதழும்​ வழங்​கப்​படு​கிறது.

 

 

Related posts

புஷ்பா 2 தி ரூல் (பட விமர்சனம்)

Jai Chandran

துருவாவின் “மார்டின்” பட முதல் சிங்கிள் “ஜீவன் நீயே” ரிலீஸ்

Jai Chandran

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்ஹாவின் ‘தடை உடை’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend