Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேச துரோக வழக்குக்கு இடைக்கால தடை

தேசத் துரோக சட்ட 124(A)  பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் சுதந்திர இந்தியாவில் தேவை யற்றது என்று கூறப்பட்டு வருகிறது. ஆனலும் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. பலர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டப்படி கைது செய்டப்பட்டால் ஒரு வருடம் ஜாமின் கோர முடியாது.

இந்நிலையில் தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்ப ட்டது. அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து மறுபரீலனை செய்யவது பற்றி கருத்து தெரிவிக்க சுப்ரீம் கோர்ட் அரசுக்கு   உத்தரவிட்டி ருந்தது.  இதையடுத்து மறுபரிசீலனை செய்ய அரசு சம்மதம் தெரிவித்தது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அரசு மறுபரிசீனை செய்யும் வரை தேச துரோக வழக்குப் பதியக் கூடாது என  சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசத் துரோக வழக்குப்  பதிவு செய்யப்படும் 124(ஏ) சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்  தொடரப்பட்ட வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்  தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் ஜாமீன் கோரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்  தெரிவித்துள்ளது.

Related posts

சன் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் குரூப்-1 தேர்வில் சாதனை:

Jai Chandran

Title look of IDUMBANKAARI

Jai Chandran

DOP SanthoshSivan Father Passedaway

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend