Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

சுமோ (பட விமர்சனம்)

படம்: சுமோ

நடிப்பு: சிவா, பிரியா  ஆனந்த், விடிவி கணேஷ், யோஷினோரி தஷிரோ, நிழல்கள் ரவி, யோகிபாபு,

தயாரிப்பு: ஐசரி கணேஷ்

இசை: நிவாஸ் கே பிரசன்னா

இயக்கம்: எஸ்.பி.யோசிமேன்

பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத், பாரஸ்

கடற்கரையில் சர்ஃபிங் பயிற்சியாளராக இருக்கிறார்  சிவா. ஒரு நாள் கடற்கரையில் ஜப்பானை சேர்ந்த சுமோ மல்யுத்த வீரர் மயக்க நிலையில் கரை ஒதுங்கி கிடக்கிறார். அவரைப் பார்த்து ஷாக்காகும் சிவா, சுமோவை மீட்டு தனது பயிற்சி இடத்துக்கு தூக்கிச் செல்கிறார். யானை போல் பலசாலியாக இருந்தாலும் குழந்தை போல் நடந்து கொள்கிறார் சுமோ. அவருக்கு லாலிபாப் வாங்கி கொடுத்து சமாளிக்கிறார் சிவா. ஒரு கட்டத்தில் அந்த சுமோ யார் என்று கண்டுபிடித்து அவரை அவரது நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்கிறார். அவர் ஜப்பான்  நாட்டைசேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது. ஜப்பானை சேர்ந்த சுமோ தமிழ் நாட்டு கடற்கரைக்கு எப்படி வந்தார், மீண்டும் அவரை ஜப்பானுக்கு அனுப்ப முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது சுமோ கிளைமாக்ஸ்.

வழக்கமாக காமெடி ஹீரோவாக நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் சிவா. இந்த படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். ஆனால் காமெடியை குறைத்துக் கொண்டு செண்டிமென்ட்டாக நடிக்க முயற்சித்திருக்கிறார். கடற்கரையில் மயங்கி கிடக்கும் சுமோவை மீட்கும் சிவா அவரை ஒரு குழந்தைபோல் பாவித்து பார்த்துக்கொள்வது சிவா இதுவரை காட்டாத ஒரு செண்டிமென்ட். சுமோவை கிண்டல், காமெடி எதுவும் செய்யாமல்விட்டது பெரிய விஷயம். கடைசி வரை சுமோ மீது ஒரு சகோதர பாசத்துடன் சிவா நடந்து கொள்வது குழந்தைகளை கவரும்.

சுமோவாக நடிக்க லோக்கல் நடிகர்களை ஏற்பாடு செய்யாமல் ஜப்பானிலிருந்து நிஜ சுமோ வீரர் யோஷினோரி தஷிரோ என்பவரை இயக்குனர் தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பது பொருத்தம்.

சுமோ வீரர் யோஷினோரி தஷிரோ நம் ஊர் ரசிகர்களுக்கு ஏற்றபடி எப்படி நடிக்க வேண்டும் என்று தெரிந்து நடித்திருக்கிறார். பிள்ளையார் வேடம் போட்டு லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டு அவர் ஆடும் ஆட்டம் குழந்தைகளை கைகொட்டி சிரிக்கவைக்கும்.
சில காட்சிகளை ஜப்பானிலேயே படமாக்கி இருப்பதும், அதேபோல் சுமோ வீரர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கி இருப்பதும் படத்துக்கு வலு சேர்க்கிறது.

சிவாவை தேவையான அளவுக்கு பயன்படுத்திக் கொண்டார்களா என்பது சந்தேகமாதான் இருக்கிறது.பல காட்சிகளில் சும்மாவே இருக்கிறார். வழக்கமான அவரது காமெடி பஞ்ச்சும் மிஸ்ஸிங். ஒன்றிரண்டு சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். சண்டைக்காட்சியில் காமெடி செய்யாமல் சீரியஸ்னஸ் காட்டி நடித்திருப்பது இதுவே முதல் முறை என்று தெரிகிறது.

வி டிவி கணேஷ், சதீஷ், யோகி பாபு, நிழல்கள் ரவி, பிரிய ஆனந்த் உள்ளிட்ட பலர் கிடைத்திருக்கிறார்கள்.

ஐசரி கணேஷ் படத்தை தயாரித்திருக்கிறார்

நிவாஸ் கே பிரசன்னா இசையில் கூடுதல் கவனம் செலுத்தி காட்சிகள்.ஜப்பான் நாட்டிற்கு செல்லும்போது இசையில் வேறுபாடு காட்டி அந்நாட்டு பாணி இசை  இசைத்திருந்தால் பிளஸ் ஆக இருந்திருக்கும்.

இயக்குனர் எஸ்.பி.யோசிமேன் ஸ்கிரிப்ட்டில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே எடுத்திருக்கிறார். ஜப்பான் சென்றவர் அங்குள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒரு பாடல் காட்சியாவது அந்த இடங்களின் பெயரை சப்டைட்டில் போட்டு படமாக்கியிருந்தால் ரசித்திருக்கலாம். சுமோ சண்டை காட்சிகளை ஏதோ செட்டு போட்டு படமாக்கியது போல் காட்டியிருக்கிறார்.

சுமோ – ஸ்லோ.

Two And A Half Star Rating Illustration Vector

 

Related posts

Sivakarthikeyan and Director Rajkumar Periasamy on board!

Jai Chandran

சினிமாவில் 7 வருடம் நிறைவு: புதுவீடு குடிபுகுந்த நிக்கி கல்ராணி

Jai Chandran

கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பட ஷூட்டிங் நிறைவு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend