படம்: பிகினிங்
நடிப்பு: வினோத் கிஷன், கவுரி ஜி கிஷன், ரோகிணி, சச்சின், லகுபரன், சுருளி, மகேந்திரன்,கே பி ஓய் பாலா
தயாரிப்பு: விநாயகா முத்துசாமி
இசை: சுந்தரமூர்த்தி கே எஸ்
ஒளிப்பதிவு: வீரகுமார்
இயக்கம்: ஜெகன் விஜயா
பி ஆர். ஒ: ஜான்சன்
ரிலீஸ் : லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்
முதலில் இது ஆசியாவின் முதல் ஸ்பிளிட் ஸ்கிரீன் படம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரே ஸ்கிரீனில் இரண்டு படங்கள். முழு படமும் இப்படி பார்ப்பது இதுதான் முதன்முறை. ஒருபக்கம் அம்மா- மகன் கதை, இன்னொரு பக்கம் இளம் பெண்ணை கடத்தியவர்கள் நடத்தும் அக்கப்போர் என இரண்டு வித களத்தில் இருவித குணாதிச யங்கள் கொண்ட பாத்திரங்கள் நடித்துக் கொண்டிருப்பார்கள்.
ரோகிணி மகன் வினோத்கிஷன் திக்கிப்பேச்சும் மந்த செயல்பாடு களும் கொண்ட வாலிபர். வேலைக்கு செல்லும் ரோகிணி, மகனுக்கு சாப்பாடு செய்துவிட்டு அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்கிறார். மறுபுறம் கவுரியை கடத்தி வரும் மூன்றுபேர் அவரை அறையில் வைத்துபூட்டி விட்டு செல்கின்றனர். மயக்கம் தெளிந்து எழும் கவுரி, தான் கடத்தப்பட்டது அறிந்து அங்கி ருந்து தப்ப முயல்கிறார். அது முடியாத நிலையில் அறைமுழு வதும் தேடி பழைய செல்போன் ஒன்றை கண்டுபிடித்து அதை ரிப்பேர் செய்து அதன் மூலம் தொடர்பு கொள்ள முயல்கிறார். ஆனால் அது வினோத் கிஷன் வீட்டு நம்பருக்கு தவிர வேறு எந்த எண்ணுக்கும் செல்லவில்லை. மனநிலை பாதித்த வினோத் கிஷன் தனக்கு வரும் செல்போன் அழைப்பை எடுத்து பேசுகிறார். மறுமுனையில் கவுரி தன்னை காப்பாற்றச் சொல்லி கெஞ்சுவதை கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். இதற்கிடையில் கவுரியை கடத்திய வர்கள் ஒருவன் அவரை துடிக்க துடிக்க மானபங்கம் செய்கிறான். கவுரியின் அலறலை போனில் கேட்டு வினோத் கிஷன் துடிக் கிறார். இறுதியில் கவுரியை வினோத் கிஷன் எப்படி காப்பாற் றுகிறார் என்பதை. கிளைமாக்ஸ் விளக்குகிறது.
இருவித காட்சிகளை ஒரே நேரத்தில் காண்பதால் அதை புரிந்து கொள்ள தயாராக சில நிமிடங்கள் பிடிக்கின்றன. நான்கைந்து சீன்களுக்கு பிறகு மைன் செட் ஆகி கதையில் கவனம் பதிகிறது.
கதையின் ஒன்லைன் மிகச் சிறியது என்றாலும் கதையில் கவனத்தை முழுமையாக ஈர்ப்பது வினோத்கிஷன் நடிப்புத்தான்.
மனநிலை பதித்தவருக்கான செயல்களை செய்தபடி அவர் கவுரி பேசும் பீச்சுக்கு குழந்தைத்தனமா கவும் எப்படியாவது அவரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பேசுவதும் வேற லெவல் நடிப்புத்தான்.
போலீசுக்கு போன் செய்தாலும் அவரது பழைய சேட்டைத்தனங் களால் அவர்கள் நம்ப மறுப்பதும் அதே போல் தாய் ரோகினியும் மகனின் பேச்சைக் விளையாட்டுத் தனம் என்று எண்ணி கண்டிப் பதும் காட்சிகளை டென்ஷனுக் குள்ளாக்குகிறது.
கவுரிகிஷன் தனிமையில் கடத்தி அடைக்கப்பட்ட பெண்ணிடம் உள்ள பதற்றத்தையும் அங்கிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்ற துடிப்பையும் அழகாக வெளிப்படுத்துகிறார்.
சிரித்துக்கொண்டே வில்லத்தனம் செய்யும் சச்சின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறார். மற்ற பாத்திரங்களும் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக் கின்றன.
விநாயகா முத்துசாமி தயாரித்தி ருக்கிறார்.
சுந்தரமூர்த்தி கே எஸ். இசை காட்சிகளை ஓவர் டேக் செய்யாதது நலம்.
வீரகுமார் ஒளிப்பதிவு கச்சிதம்.
கதையை ஸ்பிலிட் ஸ்கிரினுக்காக யோசித் தாரா அல்லது யோசித்த கதையை ஸ்பிளிட் செய்து படமாக்கினாரரா இயக்குனர் ஜெகன் விஜயா என்பது புதிர் . ஆனால் ஒன் லைன் கதைக்கு எப்படி பூஸ்ட் தர வேண்டுமோ அப்படி பூஸ்ட் தந்திருக்கிறார்.
aaஎடிட்டர் சி எஸ் பிரேம் குமாரின் கைவண்ணம் நன்றாக கைகொடுத்திருக்கிறது.
பிகினிங் – இரண்டு கண்ணில் இரண்டு காட்சி.

