Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆந்திர ரசிகர்களை மயக்கும் ஸ்ருதிஹாசன்..

நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த “3”படம் மீண்டும் ஆந்திராவில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்பை அனைவரும் பாராட்டும் நிலையில், ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் நடிப்பை கொண்டாடி வருகிறார்கள்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என பல இடங்களிலும் கலக்கி வருகிறார். அழகு, நடிப்பு, நடனம், பாடல் என அனைத்திலும் சிறந்த திறமை கொண்டவர் ஸ்ருதிஹாசன். மிகவும் தேர்ந் தெடுத்து சிறந்த படங்களில் நடித்து ரசிகர் மனங்களை கொள்ளை கொண்டு வருகிறார். குறிப்பாக ஆந்திராவில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012ல் வெளியான 3 திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திராவில் மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் குறிப்பாக நடிகை ஸ்ருதி ஹாசனின் நடிப்பை விமர்சகர்களும் பொதுப்பார்வை யாளர்களும் பாராட்டி வருகி றார்கள். இதனால் உற்சாக. மடைந்த ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் இதனை இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் கே ஜி எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Related posts

Kuruthi Aattam First Single Today’s

Jai Chandran

நானியின் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ பட முன்னோட்டம்

Jai Chandran

ரஜினிக்கு வாழ்த்து சொன்ன ரெட்.ஜெயன்ட் டீம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend