Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராஜா இசையில் ஸ்ரீகாந்த் நடிக்கும் தினசரி

CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’.

இதில் ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், சாந்தினி தமிழரசன், குமார் நடராஜன், சரத், நவ்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

அறிமுக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் எடிட்டர் ஸ்ரீகாந்த் நடன இயக்குனர் தினேஷ் குமார் மற்றும் சிந்தியா லூர்டே தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிக விரைவில் குடும்பங்கள் கொண்டாட திரைக்கு வர உள்ளது

Creative head சிந்தியா லூர்டே மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் இயக்குனர் தினேஷ் தீனா கதைக் களம் பற்றி கூறியதாவது.

அன்பான தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் கூடிய அழகான குடும்பம். இந்தக் குடும்பத்தில், நம் நாயகன் சக்தி ஒரு புயல் போன்றவர். அமெரிக்காவிலிருந்து தமிழ் கலாச்சாரத்தை நேசிக்க வந்த அமைதியான மற்றும் மென்மையான தென்றல் நம் நாயகி ஷிவானி.

நாயகனின் வித்தியாசமான ஒரு குணத்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அது என்ன பிரச்சினை, அது எப்படி தீர்ந்தது, அதில் நாயகிக்கு என்ன பங்கு என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம்தான், தினசரி.

இந்த படத்தில் காதலிக்க என்று துவங்கும் பாடல்தான் மறைந்த பாடகி பவதாரினி பாடிய கடைசி பாடலாகும். அது மட்டுமல்ல.. படத்தின் அனைத்து பாடல்களையும் இளையராஜாவே எழுதி இசை அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாயகி சிந்தியா லூர்டே அமெரிக்காவில் வசிக்கும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். கலைத்துறை மீதுள்ள ஆர்வம் காரணமாக, அமெரிக்காவிலேயே நடனம், இசை பயிற்சி பெற்றார். அமெரிக்காவில் வசித்தாலும், தமிழ்த் திரையுலகில்தான் தடம் பதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில், தினசரி படத்தை நடித்து தயாரித்து உள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

நடிகர்கள் & தொழில் நுட்ப கலைஞர்கள்:

நடிகர்கள் :

ஸ்ரீகாந்த் ,
சிந்தியா லூர்டே,
ராதா ரவி,
எம். எஸ். பாஸ்கர்,
பிரேம்ஜி,
மீரா கிருஷ்ணன்,
வினோதினி,
சாந்தினி தமிழரசன்
சாம்ஸ்,
குமார் நடராஜன்,
சரத்,
நவ்யா

தயாரிப்பு நிறுவனம் : சிந்தியா பிரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சிந்தியா லூர்டே
எழுத்து & இயக்கம் : சங்கர்
போஸ்ட் புரொடக்‌ஷன் இயக்குனர் : தினேஷ் தீனா
இசை : இசை ஞானி இளையராஜா
ஒளிப்பதிவாளர் : ராஜேஷ் யாதவ்
படத்தொகுப்பு : ஸ்ரீகாந்த்
ஸ்ட்ன்ட் : ஸ்ட்னர் சாம்
நடனம் :தினேஷ் குமார்
மக்கள் தொடர்பு : இரா. குமரேசன்

Related posts

K.T.Kunjumon’s “GENTLEMAN2” Cinematographer Ajayan Vincent.

Jai Chandran

ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” படம் ஜூலை 1 வெளியீடு

Jai Chandran

பத்திரிகையாளர்களின் நலனுக்காக நடிகர்கள் பாடி நடித்துக் கொடுத்த பாடல்்விரைவில்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend