திரைப்படபாடலாசிரியர், கவிஞர் சினேகன். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ம நீ ம வேட்பாளராக போட்டியிட்டார்.
சினேகன், நடிகை கன்னிகா காதலித்து வந்தனர், அவர்கள் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. அதன்படி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது.
கமல்ஹாசன் கலந்து கொண்டு சினேகன் கன்னிகா திருமணத்தை நடத்தி வைத்தார். திரை யுலக பிரமுகர்கள் பாரதிராஜா, அமீர், ராசி அழகப்பன், பழ கருப்பையா மற்றும் அரசியல் உலக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்