Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவகார்த்திகேயனின் “அமரன்” படத்துக்கு இராணுவத்தினர், கமல் பாராட்டு

ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இன்டர்நேஷனல் சார்பில் கமலஹாசன், சோனி பிக்சர்ஸ் ஆர் மகேந்திரன் இணைந்து பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம் அமரன்.

இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.  இப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 31ஆம் தேதி (நாளை) உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

அமரன் படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மீடியா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர் கூறியதாவது.

சோனி பிக்சர்ஸ்ஸிடமிருந்து அமரன் படம் இயக்குவது பற்றிய எனக்கு  வாய்ப்பு வந்தது இது பற்றி உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து படத்தை வழங்குவதற்காக கேட்டோம். அவர் அமரன் படத்தின் கதையை கேட்டுவிட்டு மிகவும் பிடித்துப் போக நானும் இப்படத்தில் தயாரிப்பு பார்ட்னராக இணைவதாக கூறி இணைந்தார். அன்று முதல் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது.

ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதியை அவரது குடும்பத்தாரிடமிருந்து முறைப்படி பெற்றிருக்கிறோம். மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார் என்று படக் குழு முடிவு செய்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனி டம் கதை கூறியதும் அவருக்கும் மிகவும் பிடித்தது. படத்தின் ஸ்கிரிப்ட்டை தன் கையில் வாங்கி வைத்துக்கொண்டு அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டார், துப்பாக்கி சுடுவது, ராணுவ மேஜர் காண பயிற்சி போன்றவற்றை டெல்லி சென்று ராணுவ வீரர்களிடமே  எடுத்துக் கொண்டார். மேலும் தனது உடற்கட்டையும் அதற்கேற்றார் போல் பயிற்சிகள் செய்து அசல் ராணுவ மேஜர்  போலவே இந்த  மாறிவிட்டார். பல்வேறு துணிச்சலான காட்சிகள்,  துப்பாக்கி சூடும் காட்சிகள், போர்க் காட்சிகள், தீவிரவாதிகள்.மீது  தாக்குதல் போன்றவற்றை எங்கெல்லாம் முகுந்த் வரதராஜன் பணியாற்றி மேற்கொண்டாரோ அந்த இடங்களுக்கு சென்று நடிக்க அதனை படமாக்கி இருக்கிறோம்.

இதில் சாய் பல்லவி முகுந்த் வரதராஜன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கி றார். இது பற்றி முகந்த் வரதராஜன் மனைவியை சந்தித்து சாய் பல்லவி  நேரில் சந்தித்து பேசி அவரது அனுபவத்தையும் கேட்டறிந்தார். பின்னர் சாய் பல்லவி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார்.

படத்தில் காதல் காட்சிகள் இடம்பெறுகிறது அது எல்லாம் திரைக்கதைக்காக சற்று சுவாரசியமாக அமைத்திருந் தாலும்  முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கும்  விதமாக அமைக்கப்பட வில்லை. இப்படம் முடிவடைந்து டெல்லியில் 900-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்

மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை படமாக்குவதற்காக முறைப்படி ராணுவ அதிகாரியிடம் படத்தின் கதை ஸ்கிரிப்ட் அளித்து அனுமதி பெறப்பட்டது. இதுதவிர படம் முடிந்த பிறகு அவர்கள் படத்தையும் சென்சார் அதிகாரிகள் போல பார்த்து , பாராட்டினார்கள்  இந்த படத்தை இந்தியா முழுவதும் உள்ள ராணுவ முகங்களில் திரையிட வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

இப் படத்தை உலகநாயகன் கமலஹாசன் பார்த்து பாராட்டி இருக்கிறார். அவர் என்ன கூறினார் என்பதை இப்படம் வெளியான பிறகு தெரிவிக்கி றேன்.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக அளவிலான ஸ்கிரீன்களில் வெளியாகும் படம் மட்டுமல்ல அவர் நடிக்கும் பேன் இந்தியா  படமாகவும் அமரன் அமைந்திருக்கிறது

இப்படம் தீபாவளி தினத்தில் திரைக்கு  வருகிறது  ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

இவ்வாறு இயக்குனர்  ராஜ்குமார் பெரியசாமி கூறினார்.

 

Related posts

அரியவன் படத்தில் 6 அடி உயர நடிகர் ஈஷான்

Jai Chandran

மாதவனின் மாறா படத்துக்கு துல்கர் சல்மான் பாராட்டு

Jai Chandran

வி.ஜே சித்ராவின் பட ட்ரெய்லர் 1 மில்லியன் கடந்து சாதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend