Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாடகர் கே கே திடீர் .மரணம்: போலீஸ் வழக்கு பதிவு

இந்தியத் திரையுலகின் பாடகர்களில் ஒருவர் கேகே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் (வயது 55). தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் yfமற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடி பிரபலமானவர் கே கே .
கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது திடீர் மரணம் அடைந் தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கே கே உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர் கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்த னர். அவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.

கே கே மரணம் இயற்கைக்கு மாறானது என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது முகம் மற்றும் தலை யில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது மரணத் திற்கு பல்வேறு விஷயங்கள் காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது. 

குறிப்பாக அரங்கத்தில் நிரம்பி வழிந்த கூட்டம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கேகே இசை நிகழ்ச்சி நடை பெற்ற அரங்கத்தில் மொத்த மாக 3 ஆயிரம் பார்வையாளர் கள் மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் அவரது நிகழ்ச்சி நடைபெற்றபோது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரங்கத்தில் அதிக வெப்பம் நிலவியுள்ளது. இதனால் கேகே-வுக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மேடையில் ஏறும்போது தவறி விழுந்ததாக கூறப்படு கிறது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

“இவன்தான் உத்தமன்” நகராதே நகராதே.. ஆனிருத் பாடிய பாடல்

Jai Chandran

Catch the teaser of SonyLIV’s much-awaited Tamil Rockerz

Jai Chandran

Malik Streams Acquires Malaysia Distribution of Coolie

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend