கடந்த 2020ம் ஆண்டு இளைய சூப்பர் ஸ்டார் சிம்பு தனது அதிரடியை தொடங்கினார். உடல் இளைத்து ஈஸ்வரன் படத்தில் 28நாட்களில் நடித்து முடித்தார். பல தடைகளை கடந்து தீபாவளி தினத்தில் அப்படத்தை வெளியிட்டார். சுசீந்திரன் இயக்கி இருந்தார். படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது மாநாடு படத்தில் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டில் பெரிய எதிர்பார்ப்புள்ள படங்களாக அமைந்திருக்கின்றன. .
இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று சிம்பு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து மெசேஜில், ‘தமிழ் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் புது பொலிவையும், புது நம்பிக்கையையும், புது உற்சாகத்தையும் அளிக்கட்டும்
அன்புடன் – சிலம்பரசன் டிஆர்’ என குறிப்பிட்டுள்ளார்.
#SilambarasanTR @SilambarasanTR_
#Atman #STR
Shot by @kiransaphoto
@teamaimpr