Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம்

தென்இந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம்

SIFCDCMA AWARDS-2021

தலைவர்: நசீர் ஹொசைன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலும்

செயலாளர்: தங்கராஜ் , சங்க உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்..

கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் நடிகர் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் எங்கள் பணி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பேசகோரிக்கை வைத்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் புதிய சங்கங்கள் தொடங்குகிறபோது அதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சங்கங்களின் ஆதரவும், அங்கீகாரமும் தேவை.

அத்துடன் ஆளும் அரசின் அங்கீகாரம் தேவை தமிழ் சினிமாவில் தற்போது எந்த அமைப்பும் வலிமை மிக்கதாக இல்லை, புதிதாக தொடங்கப்பட்டுள்ள தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குநர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம் என்கிற அமைப்பு சென்னை பிரசாத் பிலிம் பிரிவியூ திரையரங்கில் விழா ஒன்றை நடத்தியது.

வழக்கமாக சிறந்த நடிகர் நடிகைகள், வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது, அப்படியொரு விழாதான் 24/04/2022 மாலை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

தமிழ் சினிமா விழாக்களில் அதிகமாக பங்கெடுத்துக் கொண்டவர் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி. அரசியல் பணி, ஆட்சி பணிகளின் நெருக்கடிக்கு மத்தியில் இளைப்பாறும் இடமாக இருப்பது சினிமா விழாக்களும், இலக்கிய கூட்டங்களும்தான் என அடிக்கடி கூறுவார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்படத் துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சினிமாவையும் திமுகவையும் பிரித்து பார்க்க முடியாது என்றார்.

அதற்கு ஒருபடி மேலாக நேற்றைய தினம் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேச்சு கலைஞரை நினைவூட்டியது. சினிமா விழாக்களில் கலைஞர் மு.கருணாநிதியின் பேச்சில் நகைச்சுவை பொங்கிவழியும், அதேபோன்றே அமைச்சர் மதிவேந்தன் பேச்சிலும் நகைச்சுவை எள்ளலும் துள்ளலுமாக இருந்தது

சிறுவயதில் புதிய படங்களை முதல் காட்சியில் பார்ப்பதற்காக சட்டை கிழிந்ததும், சட்டை பட்டன்கள் பறிபோன சொந்த அனுபவத்தை விவரித்தபோது சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.

சட்டமன்ற கூட்டதொடர், மானிய கோரிக்கை விவாதம், பட்ஜெட் என நெருக்கடியான சூழலில் விழாவிற்கு வர முடியாது என கூறினாலும் மக்களுக்கான அமைச்சராக இருக்க வேண்டும் என்பதால் விழாவிற்கு வந்தேன், இங்கு வந்த பின்தான் தெரிகிறது என் போன்ற அமைச்சர்கள் இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பதால் புத்துணர்ச்சி கிடைக் கிறது.

எனது அரசியல் பணி, ஆட்சிப்பணிகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் நிகழ்வாக இந்த விழா இருக்கிறது என கூறியது கலைஞரை நினைவூட்டியது. பொதுவாக அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விழாக்களில் கட்டுப்பாடுகளும், இறுக்கமான சூழல் மட்டுமே நிலவும் அதனை முற்றிலும் தவிர்த்து அரங்கிற்குள் நுழைந்தது முதல் விழா முடியும்வரை விழாவில் பங்கேற்ற, விருது பெற்ற கலைஞர்களுடன் சகஜமாக அரட்டையடித்து கலகலப்பான சூழலை அமைச்சர் மதிவேந்தன் உருவாக்கியது ஆச்சர்யமாகவே பார்க்கப்பட்டது.

விழாவில் ஜெய்பீம் லிஜோமோல், மணிகண்டன், மற்றும் சினேகா, யாஷிகா ஆனந்த், அபிராமி, அம்பிகா, ஆறு முதல்வர்களுடன் பணியாற்றிய நெல்லை சுந்தர்ராஜன் அவர்களுக்கும் மற்றும் டைமண்ட் பாபு, விஜயமுரளி முனுசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மதிவேந்தன் அவர்கள் வழங்கினார்

Related posts

இயக்குனர் ஈ ராமதாஸ் காலமானார்: இயக்குனர்கள் அஞ்சலி

Jai Chandran

5 Million Views for Rakshit Shetty’s *Richard Anthony*

Jai Chandran

JettyTrailer Starring MaanyamKrishna

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend