Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் பொது செய்திகள்

ஆர்.எம். வீரப்பன் வாழ்க்கை படத்தில் ஜெயலலிதா பற்றி ரஜினி பேச்சு: 30 ஆண்டுக்கு பின் உடைத்த ரகசியத்தால் பரபரப்பு..

RMV THE KINGMAKER — அருளாளர் ஆர். எம். வீரப்பன் ீ அய்யாவின்
வாழ்க்கை வரலாறை வெளிப்படுத்தும்
ஆவணப்படம். 30 ஆண்டுகளுக்கு பிறகு பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் பேசிய வெடிகுண்டு சம்பவத்தால் ஆர் எம் வீரப்பன் அமைச்சர் பதவியை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பறித்த பரபரப்பான சம்பவம் பற்றி ரஜினிகாந்த் மனம் திறந்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக முக்கிய பதவி வகித்தவர் , எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் மற்றும் அவரது அரசியல் சாணக்கிய பொறுப்பையும் வைத்திருந்தவர் அருளாளர் ஆர். எம். வீரப்பன். அவரது
வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமா
மற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும்
பங்களிப்புகளை பதிவு செய்யும் “RMV The
Kingmaker” ஆவணப்படம் விரைவில்
வெளியாகிறது.

ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும்
அறிஞர் அண்ணா ஆகியோருடன்
பணியாற்றிய அவர், பின்னர் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய துணையாக
இருந்தார்.
ஆர். எம். வீரப்பன் அய்யாவின் சேவை,
ஒழுக்கம், தலைமைக் குணம் மற்றும் தமிழுக்கு
அவர் செய்த அர்ப்பணிப்பு இந்த படத்தில்
விரிவாக காட்டப்பட்டுள்ளது.
அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள்
மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்த
ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனங்கள்
இந்த ஆவணப்படம் சத்யா மூவிஸ் மற்றும் தி
கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் இணைந்து
தயாரித்துள்ளது.
அருளாளர் ஆர். எம். வீரப்பன் ீ அய்யா சினிமா
வளர்ச்சிக்கும், தமிழ் வரலாறு மற்றும்
கலாச்சாரத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகளை
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல
வேண்டும் என்பதே இந்த தயாரிப்பு
நிறுவனங்களின் நோக்கம்.


தயாரிப்பாளர்
அருளாளர் ஆர். எம். வீரப்பன் ீ அய்யாவின் மகன்
தங்கராஜ் வீரப்பன் ீ , தந்தையின் பாரம்பரியம்,
பண்புகள் மற்றும் சமூகப் பணிகளை மிகுந்த
அன்பும் மரியாதையும்கொண்டு இந்த
ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.
இது தந்தைக்கு அவர் செலுத்தும் மனமார்ந்த
அஞ்சலி.
இயக்குநர்
ஆவணப்பட இயக்குநர் பினு சுப்பிரமணியம்,
உண்மை மற்றும் வரலாற்றை எளிமையாகவும்
ஆழமாகவும் பதிவு செய்யும் வகையில் இந்த
படத்தை வடிவமைத்துள்ளார்.
அவரின் ஆராய்ச்சி, கதை சொல்லும் திறன்,

மற்றும் காட்சிகளை நுணுக்கமாக உருவாக்கும்
நடை இந்த ஆவணப்படத்தின் முக்கிய
பலமாகும்.
ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, எங்கள் குழு
அருளாளர் வீரப்பன் ீ அய்யா பிறந்த
கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன்
நேரடியாக உரையாடி பல முக்கிய
தகவல்களை சேகரித்தது.
மேலும் சினிமா, அரசியல், இலக்கியம், ஆன்மீகம், ISRO விஞ்ஞானிகள், மற்றும்
வரலாற்றாளர்கள் உள்ளிட்ட பல துறைகளின்
நிபுணர்களை சந்தித்து விரிவான ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டன.
படத்தில் இடம்பெ ற்றுள்ள முக்கிய நபர்கள்
● தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
● சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

* ஆர் கண்ணன்
● ஆர். சரத்குமார்
● சத்யராஜ்
● கவிஞர் திரு. வைரமுத்து
● ISRO விஞ்ஞானி நம்பி நாராயணன்
மேலும் பல முக்கிய ஆளுமைகள் ஆர் . எம். வீரப்பனின் சாதனைகள் அவரது நற்குணங்கள் பற்றி விளக்கமாக பேசியிருப்பதுடன் தங்களது அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் பேசும்போது அவர் மேடையில் இருந்தும் அதற்கு மறுப்பு தெரிவிக்காததால் ஆர் எம். வீரப்பன் பதவியை ஜெயலலிதா பறித்த சம்பவம் அப்போதைக்கு பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை அதுபற்றி ரஜினிகாந்த்தோ, ‌ மறைந்த ‌ஆர் எம் வீரப்பனோ வெளிப்படையாக பேசியது இல்லை. அந்த சம்பவத்தை ஆர் எம் . வீரப்பனின் வாழ்க்கை வரலாறாக உருவாக்கி இருக்கும் ஆர் எம் வி “தி கிங் மேக்கர்” ஆவண படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளிப் படையாக பேசியிருப்பது திரையுலகிலும் அரசியல் உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.“RMV The Kingmaker” ஆவணப்படம் என்பது ஒரு வாழ்க்கை
வரலாறு மட்டுமல்ல;
தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல்
வரலாற்றில் முக்கிய பங்காற்றிய அருளாளர்
ஆர். எம். வீ ரப்பன் அய்யாவின் அரிய
பயணத்தை பதிவு செய்யும் வரலாற்று
ஆவணப்படம்.
அவரின் தலைமைக் குணம், நம்பிக்கை,
திறமை மற்றும் தமிழ்ப்பண்பாட்டுக்கு அவர்
செய்த பங்களிப்புக்கான ஒரு மரியாதை இது.

News By

K Jayachandhiran

Trending cinemas now com

 

Related posts

Radhakrishnan Parthiepan-Gautham Karthik starrer Yutha Satham

Jai Chandran

Nee Podhum Kanna 1st Single From Kasadat Tabara

Jai Chandran

‘கல்கி 2898 AD’ பட, அனிமேஷன் வீடியோ வெளியாகிறது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend