Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்  ஆர்யா ஹீரோ

நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து வழங்கும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்  ஆர்யா நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படம்  ஆர்யா 33 என்று அழைக்க படுகிறது .

தமிழ் சினிமாவின் பெரும் பிரபலங்களான, இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் என்றும் வீற்று இருக்கும் ஆர்யா கூட்டணியில் உருவான மேஜிக் தான் “டெடி” திரைப்படம்.  இத்திரைப்படம் தமிழ் ஓடிடி வரலாற்றில் பெரும் சாதனை புரிந்துள்ளது. OTT தளங்களில் வெளியிடப்பட்ட ஒரிஜினல்களில் பெரும்பாலானவை தமிழ் பேசும் நகர்ப்புற மக்கள் மற்றும் வெளிநாடடு மக்கள் மட்டுமே காணும் வகையில் இருந்தபோது, ‘டெடி’ தடைகளை உடைத்து புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்தது. இந்த திரைப்படத்தின் புதிய கதையமைப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், பலதரபட்ட மக்களும் விரும்பும்படி அமைந்துள்ளது. திரை வரலாற்றில் மிகபெரிய மைல்கல்லை உருவாக்கிய ஆர்யா-சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி,  மீண்டும் ரசிகர்களை கட்டி போட ஒரு புதிய திரைப்படத்துடன் வருகை புரிந்துள்ளது. ஆர்யா 33 என தற்காலிகமாக பெயரிடபட்டுள்ள இந்த திரைப்படம் நிச்சயம் திரையரங்கு வெளியீடாக வெளிவரவுள்ளது.  ஆம்! இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைகிறது. இதனை நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.  இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜனுடைய முந்தைய திரைப்படங்களான ‘நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் மற்றும் டெடி’ போன்று மொத்தமாக நாம் இதுவரை பார்த்திராத புதுவகை ஜானர் படங்கள் தருவதில் வல்லவர். இந்த படத்திலும் மற்றுமொரு புதிய முயற்சியை கையாண்டு இருக்கிறார்.

படத்தின் படபிடிப்பு மிக எளிமையான  பூஜையுடன் இன்று  (அக்டோபர் 25, 2021) இனிதே துவங்கியது.

இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் படம் பற்றி கூறுகையில்..
“பொது முடக்கத்தால் பல காலமாக இயங்காமல் இருந்த திரையுலகம், மீண்டும் ஒரு புத்துணர்வுடன் இயங்குவதை பார்க்க, மிகவும் சந்தோஷமாக உள்ளது.  தற்போது  பல படங்கள் மிகவும் வேகமாக உருவாகி வருகிறது.  திரையுலகம் உற்சாகமாக இயங்கி வருகிறது. இந்நேரத்தில் பெரும் ஆர்வத்துடன் இந்த படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி எனது தயாரிப்பாளர் நடிகர் ஆர்யா முன்வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த திரைப்படம் எல்லா ரசிகர்களையும், ஈர்க்கும்படி இருக்கும் என நம்பிய ஆர்யாவிற்கும், The Show People மற்றும் Think Studios தயாரிப்பாளர்களுக்கும் நான் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனின்  முந்தைய திரைப்படங்கள் அனைத்தும் வழக்கத்திற்கு மாறாக தமிழுக்கு முற்றிலும் புதுமையான கதைக்களங்கள் கொண்டவையாக இருந்ததையொட்டி, இத்திரைப்படம் என்ன மாதிரி இருக்கும்? என்பதை குறித்து கேட்டபோது.. அவர் புன்னகையுடன், “ அதை பற்றி இப்போது கூறுவது சரியாக இருக்காது, ஆனால் இத்திரைப்படம் கண்டிப்பாக புதுமையாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் கூற முடியும்” என்றார்

நடிகர் ஆர்யா பற்றி இயக்குனர் கூறியதாவது,

“திரையுலகின் மிக அரிதான  முத்து ஆர்யா என்று நான் எப்போதும் நம்புகிறேன். எல்லா நடிகர்களுக்கும், இயக்குனர்கள் உருவாக்கும் கதாபாத்திரங்களுக்குள் தங்களை புகுத்தி கொள்ளும் திறன் இல்லை.  ஆனால் ஆர்யா அப்ப்டியில்லை, இதற்கு ஆர்யாவின் 33 படங்களும் சாட்சி, குறிப்பாக அவர் கடைசியாக நடித்த டெடி, அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை திரைப்படங்களை கூறலாம்.  அந்த வகையில் இந்த புதிய படம் கண்டிப்பாக அவருக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் இதுவரை அவர் செய்திராத கதாபாத்திரமாக இருக்கும். என்றார்.

கதை களம், திரைக்கதையில் வரும் ஆச்சர்ய திருப்பங்கள் மற்றும் புதுமையான ஜானர் மட்டுமல்ல, இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் படங்களின்  தலைப்புகளும் ரசிகர்களை ஈர்க்க கூடியதாகவே எப்போதும் இருக்கும். என்னுடைய படங்களின் தலைப்புகளுக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் பெரும் வரவேற்பு தந்து வருவது, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த புதிய திரைப்படத்தின் தலைப்பு மிகவும் புதுமையானதாக இன, மொழி எல்லைகள் கடந்து உலகமெங்கும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும் என்றார்.

இப்படத்தில், டி.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். ஆர்.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, எஸ் எஸ் மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். வி.அருண் ராஜா சிஜி ஹெட்டாக பணியாற்றியுள்ளார். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்.

Related posts

Lyca Productions Subaskaran steps into Mollywood

Jai Chandran

மனைவியா? காதலியா? பார்த்திபனிடம் தேவயானி கேள்வி

Jai Chandran

Kamal Haasan releases first look of Santhanam-starrer ‘Inga Naan Thaan Kingu’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend