Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டெட்பூல் வால்வரின் (ஆங்கில பட விமர்சனம்)

படம்: டெட்புல் மற்றும் வால்வரின்

நடிப்பு:  ரயான் ரெனால்ட்ஸ், ஹக் ஜாக்மேன், எம்மா கொரின் மொரினா, ராப் டெலனே, லெஸ்லி மற்றும் பலர்

தயாரிப்பு: மார்வெல் ஸ்டுடியோஸ்

இசை:  ராப் சிமென்சன்

ஒளிப்பதிவு:  ஜார்ஜ் ரிச் மாண்ட்

இயக்கம்: ஷாவ்ன் லெவே

மார்வெல் காமிக்சை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சூப்பர் மேன் கதை வரிசையில் டெட்பூல்  வால்வரின் படமும் அடங்கும். ஓய்வு காலத்தில் தனது கேர்ள் பிரண்டுடன் பொழுதைக்  கழிக்க எண்ணுகிறார் டெட்பூல். ஆனால் அவரது உலகை காக்க வேண்டும் என்பதற்காக அவரை மிஸ்டர் பாரடக்ஸ் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து தங்களின் பணிகளை செய்ய உதவுமாறு கேட்கின்றனர். அதற்கு பதிலாக டெட் பூலின் உலகை காக்க உதவுவதாக கூறுகின்றனர் ஆனால் மிஸ்டர் பாரடக்சிடம்  இருக்கும். டைம் லைன் டிவைசை டெட் புல் கைப்பற்றுகிறார். அவரை மிஸ்டர் பராடக்ஸ் பிடித்து கொடுமைக்காரி கசான்ட்ரா இருக்கும் குப்பை பகுதிக்கு அனுப்பி வைக்கிறார். இதற்கிடையில் டெட்பூல்  வால்வரினை சந்திக்கிறார். இந்த இருவருமே கசான்ட்ராவின் கோட்டைக்குள் சிக்கி அங்கிருந்து தப்பி வருகின்றனர். ஏற்கனவே வால்வரின்  தன்னை நம்பியவர் களை காப்பாற்ற முடியவில்லை என்ற சோகத்தில் இருக்கும் நிலையில் அவருக்கு ஆறுதல் சொல்லும் டெட்பூல்,  மிஸ்டர் பாரடக்ஸ் உலகத்துக்கு வந்தால் நீ இழந்ததையும் மீட்டு விடலாம் என்று ஆசை காட்டுகிறார் அதை  நம்பி மிஸ்டர் ப்ராடக்ஸ் இருக்கும் இடத்திற்கு டெட் பூலுடன் வால்வரின் வருகிறார். இந்நிலையில் குப்பை மேட்டு பகுதியில் இருந்து கசான்ட்ரா மிஸ்டர் பராடக்ஸ் ஆய்வுக் கூடத்துக்கு வந்து அங்கிருக்கும் டைம் லைன் கேபிளை தன்வசப்படுத்தி உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவர முயற்சிக். கிறாள். அந்த முயற்சியை டெட்பூல் வால்வரின் எப்படி முறியடிக்கின் றனர் என்பதுதான் கிளைமாக்ஸ்.

ஒரு வழியாக கதையை சுருக்க மாக சொல்லி முடித்தாகிவிட்டது. இனி படத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஹீரோக்களின் நடிப்பை பற்றி தான் பேச வேண்டும்.

இந்த படம் தமிழில் டப்பிங் ஆகி வந்திருப்பதால் தரைலோக் கலுக்கு வசனங்களை எழுதி அரங்கை சிரிப்பு மழையில் தெறிக்க விட்டிருக்கிறார்கள் டப்பிங் வசன எழுத்தாளர்கள்.  அந்த வசனங்களை தங்கள் இஷ்டத்துக்கு பேசி அரங்கை இளைஞர் பட்டாளங்களின்  விசில் சத்தத்தில்  ஆர்ப்பரிக்க வைக்கின்றனர்.ட ப்பிங் பேசி இருக்கும் கலைஞர்கள்.

டபுள் மீனிங் என்றெல்லாம் கிடையாது  நேரடியாகவே சிங்கிள் மீனிங்கில்  வசனங்களை டெட்பூல் வால்வரின் பேசி காதை கொய் என்றாக்குகின்றனர். ஆங்கில வசனங்களும் அந்த ஊருக்கு ஏற்ப தரைலோக்கலிலேயே எழுதி இருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது.  ஏனென்றால் இங்கே பேசும் தரை லோக்கல் வசனங்களுக்கும் கதாபாத்திரங். களின் லிப் சிங்கிற்கும் ஏக பொருத்தமாக வசனங்கள் அமைந்திருக்கின்றன.

ராயான்  ரெனால்ட்ஸ் டெட்பூல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பெரும்பகுதி காட்சிகளில் அவர் தனது சிவப்பு காஸ்டியூமில்  முகத்தை மூடிக்கொண்டு வருகிறார். ஆனாலும் அவர் எப்படி முகபாவனை காட்டி நடித்திருப்பார் என்பதை அவரது உடல் மொழியில்  உணர முடிகிறது.

ஹக் ஜாக்மன் வழக்கமான தனது வால்வரின் கதாபாத்திரத்தில் தெறிக்கவிட்டிருக்கிறார். கிளைமாக்ஸ் நெருக்கத்தில் அவர் தனது கட்டுமஸ்தான உடற்கட்டை காட்டி ஆக்சன் காட்சிகளில் களமிறங்கும்போது அரங்கம் அதிர்கிறது.

கசான்ட்ரா கதாபாத்திரத்தில் மொட்டை தலையுடன் வரும் எம்மா மாய வித்தைகள் செய்து டெட்பூலையும் வால்வரினையும் புரட்டி எடுப்பது திகில் கிளப்புகிறது.

படத்தில் ஆக்சன் காட்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும் கற்பனை செய்து பார்க்க முடியாத பிரம்மாண்ட அரங்குகள் மலைப்பை ஏற்படுத்துகிறது.

ராப் சிமென்சன்  இசை அலற விடுகிறது. அதேபோல் ஜார்ஜ் ரிச் மாண்ட் கேமரா 360 டிகிரி சுழன்றிருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கிளைமாக்ஸ் முடிந்தவுடன் வரும் இப்படத்தில் பணியாற்றியவர் களின் பெயர்களை பார்க்கும் போது இத்தனை ஆயிரம் பேர்களா இப்படத்திற்காக பணியாற்றி இருக்கிறார்கள் என்ற ஆச்சரியம் மேலிடச் செய்கிறது. கூடவே படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய  காட்சிகள் இணைக்கப்பட்டிருக் கிறது

டெட்பூல் வாலவரின் –  நட்பு வட்டாரங்களுடன். சிரித்து மகிழ ஆக்சன் அட்டாக்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை

Jai Chandran

நானியின் சூர்யா’ஸ் சாட்டர் டே’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு

Jai Chandran

D. Imman Releasing 1st Song of Ward 126

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend