Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் படத்துடன் ‘ஜவான்’ பட டிரெய்லர்

ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம், ஹாலிவுட் படமான ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம், ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் ஹாலிவுட் படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியான பதிவில்…# ஷாருக்கானின் அடுத்த வெளியீட்டிற்கான கவுண்ட் டவுனைத் தொடங்குங்கள். # ஜவான் படத்தின் முன்னோட்டத்தை காண தயாராகுங்கள். # மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் – எனும் திரைப்படத்துடன் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜவான் திரைப்படம் உணர்வுப்பூர்வமான ரோலர்கோஸ்டர் சவாரியாக இருக்கும். இதயம் அதிர வைக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன், பார்வையாளர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும். இந்த படத்திற்காக முற்றிலும் தன் தோற்றத்தை மாற்றியிருக்கிறார் இந்திய சூப்பர்ஸ்டார் ஷாருக்கான். இது ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரையிலும் இல்லாத புதுமையான தோற்றத்தில் ஷாருக்கான் தோன்றுவதால், ரசிகர்கள் மட்டுமல்லாது, ஊடகங்களும் ஜவான் முன்னோட்டத்தைக் கண்டுகளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜவான் பன்முக திறமை மிக்க, நடிகர் ஷாருக்கானின் முழு திறமையையும், நடிப்பையும் வெள்ளித்திரையில் வெளிக்கொண்டுவரவுள்ளது.

நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடிக்க புதுமையான அனுபவம் தரும் இந்த அற்புதமானஆக்சன் படத்தை, ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரித்திருக்கிறார். இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில், ஷாருக் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படம், செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.

Related posts

தனுஷ் நடிக்கும் மாறன் மார்ச் 11 ரிலீஸ்

Jai Chandran

கோவை ஜிஆர்டி கல்லூரியில் “கோப்ரா” விக்ரம்

Jai Chandran

காமிக்ஸ் வடிவில் அப்போலோ வரலாறு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend