Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவர்னர் உரை: ச ம க தலைவர் சரத் அறிக்கை

வெளியிட்டுள்ளஅறிக்கையில்ஆளுநர் உரையில் வரவேற்கத்தக்க அம்சங்களும், ஏமாற்றமளிக்கக் கூடிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன என்றுஅ அகிலஇந்திய சமத்துவ மக்கள் கட்சியின்நி றுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறி உள்ளார்.

16 – வது தமிழக சட்டசபை கூட்டத்தின் முதல் கூட்டத்தொடரை துவங்கி வைத்து உரையாற்றிய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும், தமிழை இந்திய அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும், மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும், அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைந்து செயல்படுத்தபடும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படும், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தமிழ்வழிபயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வரவேற்கத்தக்க சாராம்சங்கள் கொண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆனால், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அகில இந்திய அளவில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு ரத்து செய்வதை பற்றியோ, வரலாறு காணாத வகையில் ரூ.100 ஐ கடந்து பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் ஏற்றங்கண்டிருப்பதால் பாதிக்கப்படும் மக்கள் நலன் கருதி வரி குறைப்பு செய்வதை பற்றியோ, மேகதாது அணை கட்டுமானம் பற்றியோ வெளியிடப்படாத அறிவிப்புகள் பெரும் ஏமாற்றமளிக்கிறது.

மக்கள் நலனுக்கான அரசு எனும்பட்சத்தில், பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்து கொள்வதுடன் மத்திய அரசு வரி குறைத்து கொள்வதற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்..

இவ்வாறு சரத்குமார கூறியுள்ளார்.

 

Related posts

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

Jai Chandran

விஜய் சேதுபதியின் “ஏஸ்” பட கிளிம்ஸ் வெளியீடு

Jai Chandran

Director SP Jananathan completed most of the work to Laabam

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend