Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரன் பேபி ரன் (பட விமர்சனம்)

படம்: ரன் பேபி ரன்

நடிப்பு: ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ்,  ஜோ மல்லூரி, இஷா தல்வார், ராதிகா, ஜார்ஜ் மரியான், ஹரிஷ் பெராடி, நாகி நீடு, விவேக் பிரசன்னா, தமிழரசன், கே பி பாலா, கபாலி விஸ்வநாத், ராஜ் ஐயப்பா, ஸ்மிரிதி, ராதிகா சீனிவாசன்

தயாரிப்பு: லஷ்மன்குமார்

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு : எஸ்.யுவா

இயக்கம்:ஜெயன் கிருஷ்ணகுமார்

பி ஆர் ஒ: ஜான்சன்

வங்கியில் வேலை செய்யும் ஆர்.ஜே.பாலாஜிக்கு பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்டு சில நாளில் திருமணம் ஆகும் நிலையில் பெரிய பிரச்னையில் சிக்குகிறார். வீட்டில் இறந்து கிடக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் உடலை சூட்கேசில் மறைத்து வைக்க காரில் கொண்டு செல்கி றார். வழியில் காரில் பிரச்னை ஏற்படவே ஷேர் டாக்சியில் சூட்கேஸை பின்பக்கமாக யாருக்கும் தெரியாமல் கொண்டு செல்கிறார். வழியில் ஏற்படும் பிரச்னையில் சூட்கேஸ் ஷேர்டாக்சி யோடு சென்று விடுகிறது. டிரைவர் கையில் சூட்கேஸ் கிடைக்க அதில் ஐஸ்வர்யா உடல் இருப்பதை கண்டு அதிர்கிறார். யாருக்கும் தெரியாமல் உடலை அவர் எரிக்க விவகாரம் போலீசுக்கு செல்கிறது. பின்னர் நடப்பதெல்லாம் எதிர்பாராத திருப்பங்க
ளாக அமைய இதில் ஆர் ஜே பாலாஜி என்ன துப்பறியும் வேலைகள் செய்கிறார் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

கிரைம் திரில்லர் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் முதல்படம் திரில்லிங் அனுபவம் பல காட்சி களில் வெகுவாக பரவியிருக் கிறது.
வழக்கமாக நக்கலும் நய்யாண்டியும்தான் பாலாஜியின் ட்ரெண்ட் அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வேடத்துக்கு எவ்வளவு எமோஷன் தர வேண்டு மோ அவ்வளவு எமோஷன் தந்து நடித்துள்ளார்.

திடீரென்று அவரது கல்யாணம் நிற்பது, லாரி மோதி கொல்ல வருவது, கார் பார்க்கிங்கில் ரவுடி கொல்ல வருவது என தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஆர் ஜே பாலாஜி திணறுவதும் ஒரு கட்டத்தில் இதற்கு பதில் கண்டுபிடிக்க துணிச்சலாக பிரச்னைகளை எதிர்கொள்வது என்று முடிவு செய்து ஆக்ஷனில் குதிப்பதும் படத்திற்கு வேகம் கூட்டுகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் கெஸ்ட் ரோல் போல் வருகிறார். ஆனால் அவரது ஆத்திரத்தை சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜியின் தாயாக  நடித்திருக்கும் ராதிகாவுக்கு சிறிய வேடம்தான்.

யார் கொலைகாரன் என்ற சஸ்பென்சை இறுதிவரை இயக்குனர். ஜெயன் கிருஷ்ணகுமார் கொண்டு சென்றி ருக்கும் விதம் காட்சி களுக்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது . அதே சமயம் அதிக கேரக்டர் களை வைத்து குழப்பு வது யார் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பதைகூட தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை.

லஷ்மன்குமரர் தயாரித்திருக்கிறார்.

த்துக்கு பெரிய தூண் சாம் சி எஸ் பின்னணி இசையின் அதிரடிதான்.

எஸ் யுவா ஒளிப்பதிவு சோடையில்லை.

ரன் பேபி ரன் – மருத்துவ படிப்பு ரவுடியிசம்

Related posts

கிருஷ்ணர் சொன்ன தர்மத்தை கருவாக கொண்ட. புதுப்படம்

Jai Chandran

Taapsee Pannu announces her Production House ‘Outsiders Films

Jai Chandran

Dhoni, Sakshi Dhoni launch audio, trailer of LGM

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend