Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரிவால்வர் ரீட்டா (பட விமர்சனம்)

படம்: ரிவால்வர் ரீட்டா

நடிப்பு: கீர்த்தி சுரேஷ், ராதிகா, சுனில், சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன், அஜய் கோஷ், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், பிளேடு சங்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, அகஸ்டின்

தயாரிப்பு: சுதன் சுந்தரம் & ஜெகதீஷ் பழனிசாமி

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் B

இயக்கம்: K சந்துரு

பிஆர்ஓ: சதீஷ் (AIM)

கதை: பேக்கரியில் வேலை செய்யும் ரீட்டா (கீர்த்தி சுரேஷ் ) தனது தாய் (ராதிகா) மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வாழ்கிறார். திடீரென்று அவரது வீட்டுக்குள் ரவுடி டிராகுலா பாண்டி நுழைகிறான். அவனை வெளியில் துரத்தும்போது ஏற்படும் மோதலில் ரவுடி கொல்லப்படுகிறான். அவனது உடலை மறைக்க ரீட்டா திட்டமிடுகிறார். இந்நிலையில் ரவுடியின் மகன் டிராகுலா பாபி (சுனில்) தனது அடியாட்களுடன் ரீட்டா குடும்பத்தை தேடுகிறான். இன்னொரு கூட்டமும் ரீட்டாவை துரத்துகிறது. இதன் முடிவு என்ன என்பதை டார்க் காமெடி கிளைமாக்சாக படம் சொல்கிறது.

70 காலகட்டங்களில் கன் பைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டா, கங்கா போன்ற தலைப்புகளில் டார்க் காமெடி ஆக்சன் படங்கள் வந்திருக்கின்றன. அந்த பாணியில் நெல்சன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் தற்போது டார்க் காமெடி படங்கள் இயக்குகிறார்கள். அந்த பட்டியலில் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டாவும் இடம் பிடிக்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே சண்டைக்கோழி 2ம் பாகம் படத்தில் ஒரு அசால்ட்டான நடிப்பை காட்டியிருக்கிறார். அதுபோல் டபுள் மடங்கான அசால்ட் நடிப்பை ரிவால்வர் ரீட்டா படத்தில் காட்டியிருக்கிறார்.

தனது வீட்டுக்குள் ரவுடி சூப்பர் சுப்பராயன் நுழைந்தவுடன் அவரை “யார் நீ ,இங்க ஏன் வந்தே” என்று அதட்டலாக கேட்கத் தொடங்கி அவரது உடலை பிரிட்ஜில் வைத்து பின்னர் கார் டிக்கியில் வைத்து கடத்தி செல்வதெல்லாம் பக்கா பவர் பேக் ஆக்ஷனில் மிரட்டுகிறார் கீர்த்தி சுரேஷ். இவரது தங்கைகளாக நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார். கழுத்தில் சாமிக்கு மாலை போட்டுக்கொண்டு முருகா முருகா என்றபடி வேண்டுதல் செய்து கொண்டு வெள்ளந்தியாகவும், விவகாரமாகவும் பேசி அரங்கை கலகலக்க வைக்கிறார்.

டிராகுலா பாண்டி என்ற தாதா கதாபாத்திரத்தில் சூப்பர் சுப்பராயன் தாதா வேலை எதுவும் செய்யாவிட்டாலும் கெத்துக்காட்டி நடித்திருக்கிறார். கதையே அவரை சுற்றி தான் பின்னப்பட்டிருக் கிறது. டிராகுலா பாபியாக சுனில் ரிவால்வர் பாபியாக பார்ப்பவர்களையெல்லாம் சுட்டு தள்ளுகிறார்.

பிளேடு சங்கர், ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன் போன்றவர்கள் லூசுத்தனமாக பேசி கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். வில்லன் அஜய் கோஸ், ஜான்விஜய் ஆகியோரையும் இந்த பட்டியலில் சேர்த்து காமெடி செய்ய வைத்திருக்கிறார்கள்.

சுதன் சுந்தரம் &
ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசை கௌவாய் ஸ்டைலில் வித்தியாசப்பட்டிருக்கிறது.

பிளாக் காமெடி படத்துக்கான ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் பி, ஆர்ட் டைரக்டர் அமைத்த செட்டை பிளஸ் ஆக வைத்துக் கொண்டு அழகாக செய்திருக்கிறார்

இயக்குனர் நெல்சன் பாணியில் புது இயக்குனர் JK சந்துரு இந்த படத்தை டார்க் காமெடி படமாக தந்திருக்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸ் தலையைச் சுற்றி மூக்கை தொடுவது போல் நீள்கிறது. கொஞ்சம் ட்ரிம் செய்தால் விறுவிறுப்பு கூடும்.

ரிவால்வர் ரீட்டா – கீர்த்தி சுரேஷின் ஜாலியான ஆக்சன் காமெடி கலாட்டா.

Review By

K Jayachandhiran

Trendingcinemasnow.com

Related posts

மலர் தூவிய போர் விமானங்கள்

Jai Chandran

Sivabhoomi shortfilm

Jai Chandran

KaalangalilAvalVasantham Shooting started with Pooja

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend