தலைநகர் டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் அனுப்பிய அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து உரிய காரணமும் தெரிவிக்கப்படவில்லை .
இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்திதான் அணிவகுப்பிற்காக ஆனுப்பப்பட்டு இருந்தது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வ தில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் முக்கியச நகரங்களில் காட்சிப் படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.