Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரெண்டு பாட்டில் வோட்கா ஆல்பம் பாடல்

திங்க்   இ ன்டி (Think Indie) தமிழ் சுயாதீன சுதந்திர இசைக் களத்தின் கவர்ச்சிகர மான மூலப்பொருளாக மாறிவிட்டது. பல்வேறு வகைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் நம்பிக்கை அளிக்கும் வீடியோ ஆல்பங்களை வழங்கும் அதன் திறன், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன் இசைக்குழுவிலி ருந்து சமீபத்திய வெளியீடாக ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்ட ‘ரெண்டு பாட்டில் வோட்கா’ ஒரு அழகான ரொமாண்டிக் டிராக் ஆகும். குறுகிய காலத்தில், இந்த பாடல் இசை ஆர்வலர்களின் உற்சாகத்தை, குறிப்பாக இளைஞர்களை வசீகரிக்கும் வரிகளுடன் கவர்ந்திழுத் துள்ளது.

ஜோஷ் விவியனின் பேச்சுவழக்கிலான வரிகளும் அவரது இசையமைப்பும் அலாதியான அதிர்வுகளை பரப்பி யுள்ளது. தவிர, ரோ வின்சென்ட் உடன் இணைந்த அவரது குரல், பாடலுக்கு மற்றுமொரு அலங்காரமாக அமைந் துள்ளது. பாடலில் நகிதா டானியா பெர்னாண்டஸ் உடைய நேர்த்தியான நவநாகரீக தோற்றம் தவறவிடக்கூடாதது.

இந்த பாடல் குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காதல், இசை மற்றும் ஓய்வு சுற்றுலா ஆகியவை எப்போதும் பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும். குறிப்பிடத்தக்க வகையில், கோவாவின் அழகை எடுத்து காட்டும் சிறந்த காட்சிகளை உள்ளடக்கிய இந்த பாடல், அந்த வகையில் நம் கவனத்தை ஈர்க்கிறது.

அருள் கூல் தனது இயக்குநரின் திறமை யால் பாடலில் நம்மை பிரமிக்க வைக்கி றார்… தவிர, ஜான் ராமுடன் இணைந்து இப்பாடலின் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார். கௌஷிக் KS (கலரிஸ்ட்), ஜோஷ் விவியன் (கான்செப்ட்), தினேஷ் (லைன் புரடியூசர்), அருண் (ஸ்டில்ஸ்), சிவா (போஸ்டர் வடிவமைப்பு), இம்ரான் ஹஷ்மி & அபர்ணா ஜா (நடனக் கலைஞர்கள்), குமார் பாண்டே (ஃப்ளேர் ஆர்ட்டிஸ்ட்) ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர் களாக பணியாற்றியுள்ளனர்.

Related posts

அம்மு அபிராமியின் பெண் பார்க்கும் வைபவம்

Jai Chandran

இரண்டாம் குத்து டைரக்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா

Jai Chandran

கலைஞர்கள் திராவிடக் கழகத்தை பின்தொடர வேண்டும் – ஆர்.கே,.செல்வமணி*

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend