Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரவி தேஜா- ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படம் தமிழில் வெளியாகிறது

தெலுங்கு திரையுலகில் மாஸ் மகராஜா என கொண்டாடப்படும் நடிகர் ரவிதேஜா நடிப்பில், தயாரிப்பாளர் பி. மது தனது சரஸ்வதி ஃபிலிம்ஸ் டிவிஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள தெலுங்கு படம் “க்ராக்”. நீண்ட பொதுமுடக்க காலத்திற்கு பிறகு சங்கராந்தி சிறப்பு திரைப்படமாக 2021 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழில் ‘மாஸ்டர்’ படம் போல் திரையரங்குகளுக்கு அலைஅலையாக பெரும் கூட்டத்தை கூட்டி வந்தது இப்படம். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மாஸ்,கிளாஸ் கமர்ஷியல் படமாக வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களின் கோலாகல வரவேற்பில், பம்பர் ஹிட்டடித்தது. பல முன்னணி நடிகர்களின் இது வரையிலான பல்வேறு வசூல் சாதனையை முறியடித்து, சாதனை படைத்திருக்கிறது.

பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களை திருவிழாக்கோலம் காண வைத்தது இப்படம். படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பால் ஆஹா ஓடிடி தளத்தில் இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் தியேட்டர்களில் கூட்டம் குறையாததால் பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் தாண்டி தமிழ் மலையாளம் மொழிகளிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன், முக்கிய கதாப்பாத்திரத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார், வில்லன்களாக சமுத்திரகனி, ஸ்டன் சிவா என தமிழக நடிகர்களே அதிகம் நடித்துள்ளனர். தமிழக தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பங்குகொண்டுள்ளனர். தமிழகத்திலும் கேரளாவிலும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டால் மொழி தெரியாத ரசிகர்கள் கூட்டமும் ரசிக்க முடியும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரியினை ஏற்ற படக்குழு “க்ராக்” படத்தின் டப்பிங் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய “க்ராக்” பிப்ரவரி 5முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளிவரவுள்ளது.

Related posts

வட்டார வழக்கு படத்துக்கு 12 நாள் தியானம்போல் இசை அமைத்த இளையராஜா

Jai Chandran

வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்

Jai Chandran

‘Rasavathi – The Alchemist’ starring Arjun Das nears completion

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend